உலக செய்திகள்

இங்கிலாந்து ; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் போரிஸ் ஜான்சனுக்கு சாதகம் + "||" + Boris Johnson Seeks Clear Path To Brexit As Exit Polls Show UK Election Win

இங்கிலாந்து ; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் போரிஸ் ஜான்சனுக்கு சாதகம்

இங்கிலாந்து ; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் போரிஸ் ஜான்சனுக்கு சாதகம்
இங்கிலாந்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் போரிஸ் ஜான்சனுக்கு சாதகமாக வெளிவந்துள்ளன.
லண்டன்,

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து  விலகுவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தது. இதன் தொடர்ச்சியாக உடனடியாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 650 உறுப்பினர்களைக் கொண்ட இங்கிலாந்து  நாடாளுமன்றத்திற்கு  தேர்தல் நடைபெற்றது.இதில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியும், ஜெரேமி கார்பைன் தலைமையிலான தொழிலாளர் கட்சியுமே பிரதான போட்டியாளர்களாக கருதப்பட்டது. 

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.  வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.  இதில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. முதல் தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகள் எல்லாவற்றையும் தீர்த்துவிடாது - முன்னணி தொற்றுநோய் ஆலோசகர்
முதல் தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகள் எல்லாவற்றையும் தீர்த்து விடாது என இங்கிலாந்து அரசின் முன்னணி தொற்றுநோய் ஆலோசகர் தெரிவித்து உள்ளார்.
2. கொரோனா ஆரம்ப கட்டத்தில் இங்கிலாந்து அரசு கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தாதது தவறு -எம்.பிக்கள் குழு
கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய ஆரம்ப கட்டத்திலே இங்கிலாந்து அரசு கடுமையான எல்லை நடவடிக்கைகளை அமல்படுத்தாதது மிகப்பெரிய தவறு என்று உள்துறை விவகாரக் குழு கூறியுள்ளது.
3. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய ஊரடங்கு குறித்து பரிசீலனை? முக்கிய தகவல்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. கொரோனாவிலிருந்து விடுபட்டாலும் ; தொடரும் வேதனை விஞ்ஞானிகள் எச்சரிக்கை
கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி: இங்கிலாந்து அறிவியலாளர்கள் ஆய்வில் வெளியாகி உள்ளது.
5. இங்கிலாந்தில் இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை
இங்கிலாந்தில் இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார்.