மாநில செய்திகள்

குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்- உதயநிதி ஸ்டாலின் கைது + "||" + Protest against the Citizenship Bill Udayanidhi Stalin's arrest

குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்- உதயநிதி ஸ்டாலின் கைது

குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்- உதயநிதி ஸ்டாலின் கைது
குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி

குடியுரிமை திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை கண்டித்து அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள்  போராட்டத்தை நடத்தி வருகின்றன.  சென்னையில் திமுக சார்பில் இளைஞர் அணி செயலாளர்  உதய நிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திமுகவினர் மத்திய அரசை எதிர்த்து கண்டனக்குரல் எழுப்பினர். குடியுரிமை திருத்த மசோதா நகலை கிழித்து எறிந்தனர்.


இதைத் தொடர்ந்து போலீசார் உதயநிதி ஸ்டாலினையும் திமுக நிர்வாகிகளையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி முஸ்லிம் அமைப்பினர் திருப்பூரில் பள்ளிவாசல்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் 45 பேர் கைது
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 45 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. மதுரை மகபூப்பாளையத்தில், குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்;கடையடைப்பு
மதுரை மகபூப்பாளையத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டமும் கடையடைப்பும் நடத்தப்பட்டது.
4. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: பா.ஜ.க.வினர் 300 பேர் மீது வழக்குப்பதிவு
திருச்சியில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: ஏரலில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏரல் வட்டார அனைத்து முஸ்லிம் ஜமாத் சார்பில், ஏரல் காந்தி சிலை அருகில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.