தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தாய் மனு + "||" + Nirbhaya case: Victim’s mother moves Supreme Court opposing review plea of convict

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தாய் மனு

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தாய் மனு
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மனு தாக்கல் செய்தார்.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி 6 பேர் கும்பலால் ஓடும் பஸ்சில் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இதில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ராம் சிங் என்பவர் திகார் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு இளம் குற்றவாளி தண்டனை முடித்து விடுதலையானார்.


மீதமுள்ள 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அக்‌ஷய் குமார் என்பவர் தனது தண்டனைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்தநிலையில், அக்‌ஷய் குமாரின் வழக்கை தள்ளுபடி செய்து, குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக தூக்கிலிட வேண்டும் என நிர்பயாவின் தாய் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த இருஸ்ரீ மனுக்களும் 17-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான வாரண்டை பிறப்பிக்குமாறு டெல்லி ஐகோர்ட்டிலும் நிர்பயாவின் தாய் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனு 18-ந்தேதி விசாரிக்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. நிர்பயா கொலை குற்றவாளியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் நிர்பயா கொலை குற்றவாளியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
2. நிர்பயா குற்றவாளிகளை மன்னிக்க முடியாது? -நிர்பயா தாயார் ஆஷா தேவி கோபம்
கற்பழிப்பு குற்றவாளிகளை மன்னிக்குமாறு கூற அவருக்கு எவ்வளவு தைரியம் என்று வக்கீல் இந்திரா ஜெய்சிங் மீது நிர்பயாவின் தாய் கடும் கோபம்.
3. சுரங்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வெளியிடாத தீர்ப்பை வரவேற்ற மத்திய மந்திரி: சர்ச்சை ஏற்பட்டதால் வாபஸ் பெற்றார்
சுரங்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வெளியிடாத தீர்ப்பை வரவேற்பதாக கூறிய மத்திய மந்திரி, சர்ச்சை ஏற்பட்டதால் அந்த கருத்தை வாபஸ் பெற்றார்.
4. நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் சிங்குக்கு மன்னிப்பு இல்லை -மத்திய உள்துறை ஜனாதிபதிக்கு பரிந்துரை
நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் சிங்குக்கு மன்னிப்பு இல்லை என மத்திய உள்துறை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பரிந்துரைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார் ; 22-ந் தேதி தூக்கு உறுதியானது
நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சக பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கருணை மனுவை நிராகரித்து உள்ளார்.