தேசிய செய்திகள்

ரேப் இன் இந்தியா என்று பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பெண் எம்பிக்கள் அமளி + "||" + Lok Sabha and Rajya Sabha adjourned till 12 pm after uproar over Rahul Gandhi's 'Rape in India' remark

ரேப் இன் இந்தியா என்று பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பெண் எம்பிக்கள் அமளி

ரேப் இன் இந்தியா என்று பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பெண் எம்பிக்கள் அமளி
ரேப் இன் இந்தியா என்று பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாரதீய ஜனதா பெண் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி

பாலியல் குற்றங்கள் தொடர்பாக விமர்சித்ததற்கு ராகுல்காந்திக்கு மக்களவையில் பாஜக பெண் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ராகுல்காந்தி பேசும் போது,  நரேந்திர மோடி 'மேக் இன் இந்தியா' என்று கூறியிருந்தார், ஆனால் இப்போதெல்லாம் நீங்கள் எங்கு பார்த்தாலும் ரேப் இன் இந்தியாவாக உள்ளது . உத்தரபிரதேசத்தில் நரேந்திர மோடியின் எம்.எல்.ஏ ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார், பின்னர் அவர் ஒரு விபத்தை சந்தித்தார், ஆனால் நரேந்திர மோடி அதுகுறித்து  ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 

மேக் இன் இந்தியா இல்லை, ரேப் இன் இந்தியா என ராகுல் பேசியதால்  சர்ச்சை எழுந்தது.  ரேப் இன் இந்தியா என்கிற வார்த்தையை பயன்படுத்தி பேசிய ராகுலுக்கு  பெண் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர்.

இது குறித்து பேசிய திமுக எம்பி கனிமொழி கூறியதாவது;-

பிரதமர் மோடி  'மேக் இன் இந்தியா' என்றார், அதை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் நாட்டில் என்ன நடக்கிறது? அதைத்தான் ராகுல் காந்தி சொல்ல நினைத்தார். துரதிர்ஷ்டவசமாக மேக் இன் இந்தியா நடப்பதில்லை. நாட்டில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இது கவலை அளிக்கிறது  என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது உரிமை மீறல் தீர்மானம் -பா.ஜனதா பரிசீலனை
அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர ஆளும் பா.ஜனதா தரப்பு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2. தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் - ஜே.பி.நட்டாவுக்கு ஸ்டாலின் பதில்
தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. பேஸ்புக்கை கட்டுக்குள் வைத்திருப்பதாக ராகுல் காந்தி விமர்சனம் -பாஜக பதிலடி
பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை பேஸ்புக் முகநூல் கண்டுகொள்வதில்லை என்று வெளிநாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றை சுட்டிக்காடி ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்து இருந்தார்.
4. தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி விபி துரைசாமி
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறி உள்ளார்
5. ராஜஸ்தான் அரசியல் விவகாரம் : பாஜக நாளை ஆலோசனை
ராஜஸ்தானில் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாளை பாஜக ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.