மாநில செய்திகள்

ஐஐடி மாணவி தற்கொலை சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி + "||" + IIT student commits suicide Petition seeking CBI probe dismissed

ஐஐடி மாணவி தற்கொலை சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

ஐஐடி மாணவி தற்கொலை சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
சென்னை 

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் கடந்த நவம்பர் 9-ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். பெற்றோர் கேரளாவில் இருப்பதால் விடுதியில் தங்கி இருக்கும் மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக கூறி, விடுதி காப்பாளர் லலிதா தேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு நவம்பர் வரை சென்னை ஐஐடி-யில் 5 மாணவர்கள் இதேபோல் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாலும், தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும் இந்த வழக்கை சிபிஐ போன்ற தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட கோரி காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தமிழகத் தலைவர் என்.அஸ்வத்தாமன் பொது நல வழக்கு சென்னை ஐகோர்ட்டில்  தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷாயி அமர்வு, ஐ ஐ டி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ-யில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு, பாத்திமா மரணம் குறித்து விசாரிப்பதாக அரசுத் தரப்பில் அளித்த விளக்கத்தை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் மனுவில் போதிய ஆவண ஆதாரங்கள் இல்லை என உத்தரவில் தெரிவித்துள்ள நீதிபதிகள், மாணவ-மாணவிகளுக்கு தேவையான மன நல ஆலோசனை வழங்க ஐஐடி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது -பாத்திமாவின் தந்தை
பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கும் தொடர்பு உள்ளது என பாத்திமா தந்தை தெரிவித்து உள்ளார்.
2. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் ஐஐடி பேராசிரியர்கள் 3 பேருக்கு சம்மன்
சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் ஐஐடி பேராசிரியர்கள் 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
3. எனக்கு பிடித்த ஊர் சென்னை என்பதால் மகளை அனுப்பினேன் -பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப்
எனக்கு பிடித்த ஊர் சென்னை என்பதால் மகளை அனுப்பினேன் என பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கூறினார்.
4. மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: தோழிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள்
சென்னை ஐஐடியில் கேரள மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரது தோழிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. சென்னை ஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்
சென்னை ஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. தற்கொலைக்கு உதவி பேராசிரியர்களே காரணம் என மாணவி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார்.