தேசிய செய்திகள்

பாலியல் பலாத்காரம் பற்றி சர்ச்சை கருத்து: நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல்காந்தி திட்டவட்டம் + "||" + "Won't Apologise," Says Rahul Gandhi Amid Row Over "Rape In India" Remark

பாலியல் பலாத்காரம் பற்றி சர்ச்சை கருத்து: நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல்காந்தி திட்டவட்டம்

பாலியல் பலாத்காரம் பற்றி சர்ச்சை கருத்து: நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல்காந்தி திட்டவட்டம்
பாலியல் பலாத்காரம் பற்றிய சர்ச்சை கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறினார்.
புதுடெல்லி,

இந்தியாவில் பெருகி வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கருத்து தெரிவிக்கையில் இந்தியா, கற்பழிப்பு தலைநகராக மாறி வருவதாக விமர்சித்தார்.

நேற்று முன்தினம் ஜார்கண்டில் தேர்தல் பிரசாரம் செய்த அவர் “பிரதமர் மோடி மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்) என்று கூறுகிறார். ஆனால் இப்போது அது ரேப் இன் இந்தியா (இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்வோம்) என்று ஆகிவிட்டது” என கூறியது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று பெரும் புயலை கிளப்பியது. தனது கருத்துக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதீய ஜனதா வலியுறுத்தியது.

இது தொடர்பாக ராகுல் காந்தி, நாடாளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அவர்கள் (பாரதீய ஜனதா) மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருகிறார்கள். நான் அவர்களிடம் ஒருபோதும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. பிரதமர் மோடி மேக் இன் இந்தியா என்று கூறி வருகிறார், ஆனால் ரேப் இன் இந்தியா என்று ஆகி இருக்கிறது. செய்தித்தாள்களை திறந்தாலே கற்பழிப்பு பற்றிய செய்திகள்தான் வருகிறது என்று சாதாரணமாகத்தான் குறிப்பிட்டேன்.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லி கற்பழிப்பு தலைநகராகி விட்டது என்று விமர்சித்தார். அந்த வீடியோ எனது செல்போனில் இருக்கிறது. அதை டுவிட்டரில் போடுகிறேன். ஒட்டுமொத்த நாடும் பார்த்துக்கொள்ளட்டும்.

(பின்னர் அதை ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவில் இணைத்து வெளியிட்டார்.)

பெண்கள் மீதான வன்முறைக்கு மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தது ஏன், நாட்டில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறித்தது ஏன் என்பதற்கெல்லாம் மோடி பதில் சொல்லட்டும்.

இன்று நாட்டின் முக்கிய பிரச்சினை, பாரதீய ஜனதாவும், நரேந்திர மோடியும், அமித் ஷாவும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களையும் எரித்து இருப்பதுதான். இதுதான் முக்கிய பிரச்சினை. இதில் இருந்து கவனத்தை திருப்புவதற்குத்தான் பாலியல் பலாத்காரம் பற்றிய எனது கருத்தில் பிரச்சினை எழுப்புகிறார்கள்.

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் நடக்காத பாரதீய ஜனதா ஆட்சி செய்கிற மாநிலம் இல்லை.

உன்னாவில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். பின் அந்தப் பெண் கார் விபத்துக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனால் பிரதமர் மோடி இது பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

என்ன நடக்கிறது என்றால், நரேந்திர மோடி வன்முறையை பரப்புகிறார். இன்று நாடு முழுவதும் வன்முறை நடக்கிறது. பெண்களுக்கு எதிராக வன்முறை நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் வன்முறை நடக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரும் பலமே அதன் பொருளாதாரம்தான்.

ஆனால் அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ யாரும் இந்தியாவைப் பற்றியோ, இந்தியாவின் பொருளாதாரம் பற்றியோ பேசுவதில்லை என்று சமீபத்தில் ஒரு சந்திப்பின்போது ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் என்னிடம் கூறினார்.

இந்தியாவைப் பற்றி பேசினால், அது இங்கு நடக்கிற அட்டூழியங்கள், பிரிவினைவாதங்கள், வன்முறை பற்றித்தான் இருக்கிறது.

அவர்கள் (பாரதீய ஜனதா) நமது நாட்டின் ஒட்டுமொத்த புகழையும் சீர்குலைத்து விட்டனர். இதைத்தான் நான் எனது பேச்சில் குறிப்பிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அண்டை நாடுகளுடனான உறவை சிதைக்கிறார்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் மோடி அழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
2. கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது- ராகுல் காந்தி பாய்ச்சல்
கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3. சீனா ஆக்கிரமித்த நமது நிலத்தை மீட்க மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? ராகுல் காந்தி கேள்வி
சீனா ஆக்கிரமித்த நமது நிலத்தை மீட்க மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
4. ஊரடங்கு ஏழைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ராகுல் காந்தி காட்டம்
கொரோனாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எந்த பலனையும் தரவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
5. ராகுல் காந்தி தலைமையை தடுப்பது காங்கிரசை அழித்துவிடும் - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரிக்கை
ராகுல் காந்தி தலைமையை தடுப்பது காங்கிரஸ் கட்சியை அழித்துவிடும் என சஞ்சய் ராவத் எச்சரித்து உள்ளார்