உலக செய்திகள்

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் 15 பேர் வெற்றி + "||" + In the UK parliamentary election 14 people of Indian origin Success

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் 15 பேர் வெற்றி

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் 15 பேர் வெற்றி
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் 15 பேர் வெற்றிபெற்றனர்.
லண்டன்,

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து உள்ளது. இதன் மூலம் போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.

இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சிகள் சார்பில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் பெருவாரியாக நிறுத்தப்பட்டு இருந்தனர். மேலும் பிற கட்சிகள் சார்பாகவும் சிலர் போட்டியிட்டனர். இதில் கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் சார்பில் தலா 7 பேர், லிபரல் கட்சியை சேர்ந்த ஒருவர் என 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.


ஏற்கனவே எம்.பி.யாக இருந்து இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட அனைத்து இந்திய வம்சாவளி எம்.பி.க்களும் தங்கள் இடத்தை தக்க வைத்துக்கொண்டு உள்ளனர். இவர்களை தவிர 3 பேர் புதுமுகங்கள் ஆவர்.

இதில் ககன் மகிந்திரா, கிளேர் கவுட்டின்கோ ஆகிய இருவரும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொழிலாளர் கட்சி சார்பில் நவேந்திரு மிஸ்ரா வெற்றி பெற்று உள்ளார்.