தேசிய செய்திகள்

2022-ல் புதிய நாடாளுமன்ற கட்டிடம் - சபாநாயகர் ஓம்.பிர்லா தகவல் + "||" + our effort is to have a new session in a new building of Parliament Lok Sabha Speaker Om Birla

2022-ல் புதிய நாடாளுமன்ற கட்டிடம் - சபாநாயகர் ஓம்.பிர்லா தகவல்

2022-ல் புதிய நாடாளுமன்ற கட்டிடம் -  சபாநாயகர் ஓம்.பிர்லா தகவல்
2022-ல் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்க வாய்ப்புள்ளதாக சபாநாயகர் ஓம்.பிர்லா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற கட்டிடம் கடந்த 1927-ம் ஆண்டு ஆங்கிலேய கட்டிட வடிவமைப்பாளர்கள் சர் எட்வின் லியூடென்ஸ் மற்றும் சர் ஹெர்பெர்ட் பெக்கர் ஆகிய இருவர்களின் திட்டத்தின் படி கட்டப்பட்டது. இதனை அப்போதைய வைசிராய் லார்ட் இர்வின் திறந்துவைத்தார். 1950-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி இந்தக் கட்டிடம் இந்திய நாடாளுமன்றம் என்ற அந்தஸ்தை பெற்றது.

கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகிய இருவரும் நாடாளுமன்றத்தை புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில்,  மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், 

நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டிடம் குறித்து விவாதித்து வருகிறோம். 2022-ல் 75-வது சுதந்திர தினத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய அமர்வை நடத்த திட்டமிட்டுள்ளளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...