மாநில செய்திகள்

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை + "||" + Rain in Chennai

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையில், சென்னையில்  திருவல்லிக்கேணி,அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல்,  காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, தேனாம்பேட்டை,  பெரம்பூர், புரசைவாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, மேடவாக்கம், பள்ளிக்கரணை, கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்து வருகிறது.