மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு + "||" + Rural local elections Release of list of AIADMK candidates

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் நீங்கலாக கிராம அளவில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டும் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 9-ந்தேதி தொடங்கியது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

*மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

* முதல்கட்டமாக வெளியான இந்த பட்டியலில், தேனி, கிருஷ்ணகிரி, அரியலூர், சேலம், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.