தேசிய செய்திகள்

ஆந்திராவில் பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை -புதிய மசோதா நிறைவேற்றம் + "||" + Andhra: Sex offenders sentenced in 21 days - New bill passed

ஆந்திராவில் பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை -புதிய மசோதா நிறைவேற்றம்

ஆந்திராவில் பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை -புதிய மசோதா நிறைவேற்றம்
பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை வழங்கும் புதிய மசோதா ஆந்திரா சட்டசபையில் நிறைவேறியது.
ஐதராபாத்,

தெலுங்கானா  மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் லாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்பட நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது.


இந்நிலையில் ஆந்திர சட்டசபையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு  அளிப்பதற்கும் அம்மாநில அரசு 2 புதிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. இதன்படி பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை விதிக்க வகை செய்யும் திஷா சட்டம் ஆந்திர மாநில சட்டசபையில் இன்று நிறைவேறியது.  இந்த சட்டம், பாலியல் வழக்குகளை 14 நாட்களுக்குள் விசாரித்து முடிக்கவும், 21 நாட்களுக்குள் தீர்ப்பளிக்கவும் வகை செய்கிறது.

முன்னதாக பாலியல் குற்றவழக்குகளை விரைந்து முடிக்க தனிச்சட்டம் கொண்டுவரப்படும் என ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் புதிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.

இந்த சூழ்நிலையில் ஆந்திர மாநில திஷா சட்டம் - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குறிப்பிட்ட குற்றங்களுக்கான ஆந்திர சிறப்பு நீதிமன்றங்கள் 2019, மற்றும் ஆந்திர திஷா சட்டம் - குற்றவியல் சட்டம் (ஆந்திர திருத்தம்) 2019 ஆகிய இரண்டு மசோதாக்கள் ஆந்திர சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் லேசான நிலநடுக்கம்
ஆந்திராவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
2. ஆந்திராவில் நடந்த உண்மை சம்பவம்: படமாகும் செம்மர கடத்தல்
ஆந்திராவில் நடந்த செம்மர கடத்தல் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று தயாராக உள்ளது.
3. ஆந்திராவில் தலைநகரங்களை மாற்றும் முடிவு நிறுத்திவைப்பு
ஆந்திராவில் தலைநகரங்களை மாற்றும் முடிவு நிறுத்திவைக்கப்பட்டது.
4. ஆந்திராவில் மணல் பற்றாக்குறைக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டம்
ஆந்திராவில் மணல் பற்றாக்குறைக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார்.
5. வீட்டு கதவு-ஜன்னலுக்கு ரூ.73 லட்சம் செலவு ஜெகன்மோகன் ரெட்டி குறித்து விமர்சனம்
வீட்டு கதவு-ஜன்னலுக்கு ரூ.73 லட்சம் செலவு செய்து உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி குறித்து விமர்சனம் எழுந்து உள்ளது.