தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: மேகாலயாவில் வன்முறை; போலீஸ் தடியடி, கண்ணீர்ப்புகை வீச்சு + "||" + Opposition to Citizenship Amendment Act: Violence in Meghalaya; The police beat, tear gas

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: மேகாலயாவில் வன்முறை; போலீஸ் தடியடி, கண்ணீர்ப்புகை வீச்சு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: மேகாலயாவில் வன்முறை; போலீஸ் தடியடி, கண்ணீர்ப்புகை வீச்சு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயாவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர்.
ஷில்லாங்,

மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது.

இது, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014-ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்துள்ளது.


இந்த சட்டத்தால் பூர்வ குடிமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருகிறது.

மேகாலயா மாநிலத்தில் நேற்று முன்தினம் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. அதைத் தொடர்ந்து ஷில்லாங் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று இந்த உத்தரவு 12 மணி நேரம் தளர்த்தப்பட்டது. செல்போன் இணையதள சேவை, செல்போன் குறுந்தகவல் சேவை மாநிலம் முழுவதும் 2 நாட்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஷில்லாங்கில் நேற்று கடைகள் மூடப்பட்டிருந்தன. சாலை போக்குவரத்து நடைபெறவில்லை. மாலையில் கவர்னர் மாளிகை அருகே நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினர்.

போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். அங்கு எடுக்கப்பட்டு வெளியான வீடியோக்களில் மக்கள் காயங்களுடன் சிவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் காட்சிகள் இடம் பெற்றன.

வில்லியம் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதல்-மந்திரி கன்ராட் சங்மா சென்றபோது, அவருக்கு எதிராக போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டனர். அவரது பாதுகாப்பு வாகனம் முன்பாக ஆண்களும், பெண்களும் திரண்டு நின்று, ‘கன்ராட் திரும்பிப்போ’ என கோஷமிட்டனர்.

அசாமில் நேற்று முன்தினம் நடந்த போராட்டங்களில் வன்முறை தாண்டவமாடியதால் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்களில் 3 பேர் பலியாகினர்.

நேற்று பல இடங்களிலும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றன.

கவுகாத்தி, திப்ருகார், தேஸ்பூர், தேகியாஜூலி உள்ளிட்ட பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

கவுகாத்தியில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரத்தில் சந்தைகளிலும், கடைகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்சென்றனர்.

அசாமில் நடந்த போராட்டங்களுக்கு காங்கிரஸ் மற்றும் வகுப்பு வாத சக்திகள்தான் காரணம் என்று முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் குற்றம் சாட்டினார்.

தீவைப்பு, பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என அவர் எச்சரித்தார்.

மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா பகுதியில் முஸ்லிம்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

உலுபேரியாவில் தேசிய நெடுஞ்சாலை எண்.6-ல் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் நேற்று கைகளில் தேசிய கொடிகளுடன் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். சாலைகளில் டயர்களை கொளுத்தி போட்டனர். இதனால் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது.

முர்ஷிதாபாத் பகுதியில் பெல்டங்கா ரெயில் நிலையத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் தாக்கப்பட்டனர். அங்கு ரெயில் சேவை பாதிப்புக்கு உள்ளானது.

தொடர்புடைய செய்திகள்

1. அரசுக்கு அறிவுரை கூறவும், எச்சரிக்கை கொடுக்கவும் சட்டப்படி எனக்கு அதிகாரம் உண்டு -முகமது ஆரிப் கான்
அரசுக்கு அறிவுரை கூறவும் எச்சரிக்கை கொடுக்கவும் சட்டப்படி எனக்கு அதிகாரம் உண்டு என்று கேரள கவர்னர் முகமது ஆரிப் கான் சட்டசபை உரையில் குறிப்பிட்டார்.
2. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
3. பாபநாசத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
பாபநாசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களைத் தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
5. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமெரிக்காவில் 30 நகரங்களில் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமெரிக்காவில் 30 நகரங்களில் போராட்டம் நடந்தது.