தேசிய செய்திகள்

அசாம்: கவுகாத்தியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்வு + "||" + Assam: Curfew relaxed from 9 am to 4 pm in Guwahati today.

அசாம்: கவுகாத்தியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்வு

அசாம்:  கவுகாத்தியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்வு
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது.
கவுகாத்தி

மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது. இது, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014-ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்துள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த சட்டத்தால் பூர்வ குடிமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அஸ்ஸாம், மேகலாயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அசாமில் நேற்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். மேலும், 11 பேர் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் காரணமாக அப்பகுதிகளில் விமானப் போக்குவரத்து, பேருந்து, ரயில் சேவை எனப் பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், மூத்த குடிமக்கள், கலைஞர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கவுகாத்தியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது. திப்ருகரில், காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு உத்தரவு இருக்கும். 

கவுகாத்தியில் பெட்ரோல் பங்க்குகள் இன்று திறந்திருக்கும்.  கட்டுப்பாட்டு அறை ஒன்று விமான நிலையத்திலும் மற்றொன்று ரெயில் நிலையத்திலும் அமைக்கப்பட்டு இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கார்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
விளையாட்டு விபரீதமானது: ஆணின் சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கார்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
2. இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பு - பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவை ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
3. தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 202 பேர் கைது - 70 வாகனங்கள் பறிமுதல்
தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 202 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 70 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4. தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 380 பேர் கைது: 105 வாகனங்கள் பறிமுதல்
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறிய 380 பேர் கைது செய்யப்பட்டனர். 105 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
5. சேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2,600 பேர் மீது வழக்கு
சேலத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை தெரிவித்தார்.