தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்; மக்கள் அச்சம்! + "||" + In the Maratha State Earthquake 3 times in succession People are afraid!

மராட்டிய மாநிலத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்; மக்கள் அச்சம்!

மராட்டிய மாநிலத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்;  மக்கள் அச்சம்!
மராட்டிய மாநிலத்தில் அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மும்பை

மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

பல்கார் மாவட்டத்தில்  இன்று காலை  5.22 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 3.9 ஆக பதிவானது.  தஹானு தாலுகாவில் உள்ள  துண்டல்வாடி என்ற கிராமத்தில்  வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்தே 2 முறை லேசான நிலநடுக்கத்தை உணர முடிந்ததாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மதியம் 12.26 மணியளவில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில், 3.4  ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் இரவு 9.55 மணியளவில் ஏற்பட்டு உள்ளது.

 எனினும் இந்த நிலநடுக்கங்களால் மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாகவே இந்த கிராமத்தில் அவ்வப்போது நிலஅதிர்வுகள் ஏற்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தஹானு தாலுகா கடந்த ஒரு வருடமாக இத்தகைய அதிர்வலைகளை அனுபவித்து வருகிறது, அவர்களில் பெரும்பாலோர் துண்டல்வாடி கிராமத்தை மையமாகக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து: பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
மராட்டிய மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
2. மராட்டியம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி ; ஜனாதிபதி - பிரதமர் இரங்கல்
மராட்டிய மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலியானார்கள். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. கொரோனா மரணங்களால் விரக்தி; விஷ ஊசி போட்டு கணவன்,குழந்தைகளை கொலை, பெண் டாக்டர் தற்கொலை
நாய்க்கு போடும் விஷ ஊசியை போட்டு கணவன், இரு குழந்தைகளை கொன்று பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
4. மராட்டிய மாநிலத்தில் மேலும் 10,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 10,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டிய மாநிலத்தில் மேலும் 7,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 7,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...