மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: மரண அடி வாங்கியது அதிமுக தான் அமைச்சருக்கு ஸ்டாலின் பதில் + "||" + Local election case: The death knell is to AIADMK Stalin's response to the minister

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: மரண அடி வாங்கியது அதிமுக தான் அமைச்சருக்கு ஸ்டாலின் பதில்

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: மரண அடி வாங்கியது அதிமுக தான் அமைச்சருக்கு ஸ்டாலின் பதில்
உள்ளாட்சித் தேர்தலில் வழக்கில் மரண அடி வாங்கியது அதிமுக தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 11 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு தொடர்பாக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரனையின் முடிவில் நீதிபதி எஸ்.ஏ.போப்டே, இந்த விவகாரத்தில் மீண்டும் தலையிட விரும்பவில்லை எனவும் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் தெளிவுபடுத்த ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “உள்ளாட்சி தேர்தல் வழக்கில் திமுகவுக்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது;-

“உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் மரண அடி வாங்கியது அதிமுக தான். திமுகவின் ஜனநாயகம் காக்கும் பணியை உச்சநீதிமன்றம் பாராட்டவே செய்தது.

அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் தேர்தலை நடத்த துடிக்கும் அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்பு, அர்ப்பணிப்பு உணர்வு உள்ள திமுக வேட்பாளர்களை களமிறக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: மு.க ஸ்டாலின்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
3. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
4. மாநிலங்களவை தேர்தல் ; 12-13 இடங்கள் கிடைக்கும் என பாஜக எதிர்பார்ப்பு
மாநிலங்களவையில் காலியாகவுள்ள 55 இடங்களுக்கு வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
5. உள்ளாட்சித் தேர்தலில் ஒத்திவைக்கப்பட்ட 102 பதவிகளுக்கு அடுத்த மாதம் 4-ந்தேதி தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
உள்ளாட்சித்தேர்தலின்போது ஒத்திவைக்கப்பட்ட 102 பதவிகளுக்கு அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.