மாநில செய்திகள்

நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில் உள்ளாட்சி வேட்மனு தாக்கல் விறுவிறுப்பு + "||" + Local election Petition in varoius Districts Momentum

நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில் உள்ளாட்சி வேட்மனு தாக்கல் விறுவிறுப்பு

நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில் உள்ளாட்சி வேட்மனு தாக்கல் விறுவிறுப்பு
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மனுத்தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது.
சென்னை,

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் திங்கட்கிழமையுடன் (16- ம் தேதி) நிறைவடையும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மனுத்தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் 2 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தொகையை ஊர் முக்கியஸ்தர்களிடம் செலுத்த வேண்டும் என ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற ஊர்மக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கும்பகோணத்தை அடுத்த கொரனாட்டுக்கருப்பூர், கொற்கை, கடிச்சம்பாடி, உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி பதவிகளுக்கு சுயேட்சைகள் ஏராளமானோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உழவு மாடுடன் வந்து வேட்பாளர் ஒருவர் மனுத் தாக்கல் செய்தார். வெள்ளானூர் ஊராட்சியில் 4-வது வார்டுக்கு போட்டியிடும் மளிகை கடை வியாபாரி சின்னசாமி ஊராட்சி அலுவலகத்திற்கு காளைமாட்டுடன் வந்து மனுவை அளித்தார்.

திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனுக்களை அளித்தனர். முசிறி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் யூனியன் அலுவலகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு மனு தாக்கல் செய்ய பெண்கள் ஆர்வமுடன் திரண்டனர். ஆவுடையார்கோயில் மணமேல்குடி பகுதியில் உள்ளாட்சிதேர்தலுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற திங்கட்கிழமையுடன் முடிவடைவதால் அரசியல் கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் தீவிரம் காட்டினர். எனவே, உள்ளாட்சி தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. செலவில்லாமலும் ஜெயிக்கலாம்!
உள்ளாட்சி தேர்தலில் பணம், பரிசுப் பொருட்கள், சாதி, மதம் அபிமானங்கள் ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி சில இடங்களில் மக்கள் இளைஞர்களை வெற்றி பெற வைத்துள்ளனர். அதே சமயம் தொண்டுக்கு பெயர் பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள் சிலருக்கு தோல்வியையும் பரிசாக்கியுள்ளனர். ஆயினும், உள்ளாட்சி நிர்வாகம் குறித்த விழிப்புணர்ச்சி பரவலாகியுள்ளது.
2. உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை: வீடியோவை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு பிறப்பித்த ஆணைக்கு தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ நகலை தாக்கல் செய்யுமாறு மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த ஆணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. உள்ளாட்சி தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய விண்ணப்பங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? -ஐகோர்ட்டு கேள்வி
உள்ளாட்சி தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய விண்ணப்பங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
4. தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டாம் -முதல்வர் பழனிசாமி
உள்ளாட்சி தேர்தல் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
5. திருப்பூர் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 742 பேர் பதவியேற்பு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 742 பேர் நேற்று பதவியேற்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை