மாநில செய்திகள்

மீம்ஸ் போடும் மாம்ஸ்களா.... நோ சூடு... நோ சொரணை... நோ பிராப்ளம்... நித்யானந்தா கலாட்டா + "||" + MeMs are Moms ...No hot ... .. No problem ... - Nithyananda

மீம்ஸ் போடும் மாம்ஸ்களா.... நோ சூடு... நோ சொரணை... நோ பிராப்ளம்... நித்யானந்தா கலாட்டா

மீம்ஸ் போடும் மாம்ஸ்களா.... நோ சூடு... நோ சொரணை... நோ பிராப்ளம்... நித்யானந்தா  கலாட்டா
மீம்ஸ் போடும் மாம்ஸ்களா உங்கள் மீம்ஸ்களால் தான் கைலாசா பிரபலமானது என நித்யானந்தா கூறி உள்ளார்.
சென்னை

கைலாசா என்ற பெயரில் தனி நாடு அமைக்கப்போவதாக நித்யானந்தா ஆரம்பித்த காமெடி, தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், அதையும் தனக்கு சாதகமாக்கி பேசி வருகிறார், நித்யானந்தா.

உலகில் எங்கோ இருந்தபடி நித்யானந்தா தினசரி உபதேசங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

நித்யானந்தா வெளியிட்டுள்ள சமூக வீடியோவில் நகைச்சுவையான ஆங்கிலத்தில் நோ சூடு, நோ சொரணை, நோ பிராப்ளம்  என விளக்கமளித்தார். மேலும் தனது சத்சங்கத்தின் போது சினிமா ஹீரோக்கள் போன்று பஞ்ச் வசனங்கள் பேசுவது ஏன் என்றும் விளக்கமளித்துள்ளார். 

பொறுத்தது போதும் பொங்கி எழு என்ற வசனத்தை கூறிய நித்யானந்தா தனது சீடர்களை ஞானப் போரில் கலந்து கொள்ளுமாறும் வீர உரையாற்றி உள்ளார்.

மீம்ஸ் போடும் மாம்ஸ்களா உங்கள் மீம்ஸ்களால் தான் கைலாசா பிரபலமானது என கூறி உள்ளார்.

கர்நாடக ஐகோர்ட்  அவருக்கு எதிரான பிடியை இறுக்கியிருக்கிறது. வரும் 18 ஆம் தேதிக்குள் நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து சொல்லவேண்டும் என்று அம்மாநில போலீசாரை கர்நாடக ஐகோர்ட்  எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நித்யானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் வழங்கியது இண்டர்போல்
குஜராத் ஆசிரமத்தில் 2 சிறுமிகள் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீஸ் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
2. ‘நித்யானந்தா பற்றி எந்த தகவலும் இல்லை’ ஈகுவடாரில் இருந்து வெளியேறிவிட்டார் - மத்திய அரசு தகவல்
இந்தியாவை விட்டு வெளியேறி உள்ள நித்யானந்தா சாமியார் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
3. நித்யானந்தாவை கைது செய்து விசாரணை நடத்த கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்
நித்யானந்தாவை கைது செய்து விசாரணை நடத்த கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. நித்யானந்தாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்கள் எங்கே? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
நித்யானந்தா கடத்திச் சென்றதாக கூறப்படும் பெண்கள் எந்த நாட்டில் உள்ளனர் என இந்திய தூதரகத்திடம் இருந்து தகவல் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5. நெத்தியடி போல் நித்தியடி கொடுக்க வேண்டும்; சீடர்களுக்கு நித்யானந்தா அழைப்பு
நெத்தியடி போல் நித்தியடி கொடுக்க வேண்டும் என தனது சீடர்களுக்கு நித்யானந்தா அழைப்பு விடுத்து உள்ளார்.