மாநில செய்திகள்

தூத்துக்குடி அருகே சாலை விபத்து: ஹோட்டல் அதிபர் பலி; நண்பர் படுகாயம் + "||" + Road accident near Thiruchendur Hotel Chancellor Kills

தூத்துக்குடி அருகே சாலை விபத்து: ஹோட்டல் அதிபர் பலி; நண்பர் படுகாயம்

தூத்துக்குடி அருகே சாலை விபத்து: ஹோட்டல் அதிபர் பலி; நண்பர் படுகாயம்
தூத்துக்குடியில் முக்காணி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஹோட்டல் அதிபர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர்  வந்த கார் முக்காணி அருகே சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், காரை ஓட்டி வந்த ஹோட்டல் அதிபர் கிட்டப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த நண்பர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடியில்  இருந்து திருச்செந்தூர்  வந்த கார் முக்காணி அடுத்துள்ள பேரிக்கார்டு அருகே உள்ள புளியமரத்தில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

காரை ஓட்டி வந்த திருச்செந்தூர் அர்ச்சனா ஹோட்டல் மற்றும் லாட்ஜ் உரிமையாளரும், உதயம் காபி பார், கிட்டு காபி பார் அதிபரும் சிறந்த ஆன்மிகவாதியான கிட்டப்பா (52) சம்பவ இடத்திலே பலியானார். 

உடன் வந்த திருச்செந்தூர் சாந்தி பேக்கரி அதிபர் ராதாகிருஷ்ணன் காயங்களுடன் தூத்துக்குடி  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார். ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பிரபல ஹோட்டல் அதிபர் இறந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதி மக்களிடையே  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .  

மோதிய வேகத்தில் காரின் பாதுகாப்பு பலூன் இருபக்கமும் விரிந்தும் உயிர் பலியாகியிருப்பது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.