உலக செய்திகள்

வீட்டில் இல்லாத நேரங்களில் தேடி ஏங்கி அழுத குழந்தை: வித்தியாசமாக யோசித்த தாய்! + "||" + Mom tricks son by placing life-size cutouts of herself to prevent him from crying

வீட்டில் இல்லாத நேரங்களில் தேடி ஏங்கி அழுத குழந்தை: வித்தியாசமாக யோசித்த தாய்!

வீட்டில் இல்லாத நேரங்களில் தேடி ஏங்கி அழுத குழந்தை: வித்தியாசமாக யோசித்த தாய்!
வீட்டில் இல்லாத நேரங்களில் தேடி ஏங்கி அழுத குழந்தைக்கு தாய் வித்தியாசமாக யோசித்து செய்த சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
டோக்கியோ,

ஜப்பானைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் வீட்டில் இல்லாத நேரங்களில், தன்னைத் தேடி ஏங்கி குழந்தை அழாமல் இருக்க, தன்னைப்போலவே உருவம் கொண்ட கட் அவுட்களை வீட்டில் வைத்துள்ளார்.

தனது ஒரு வயது மகனின் ஏக்கத்தை தடுக்க முயற்சித்த அவர், வீட்டின் நடுப்பகுதியில், தான் தரையில் அமர்ந்தபடி தோற்றமளிப்பது போன்ற கட்-அவுட்டை நிறுவியுள்ளார். அதேபோல, சமையலறையில் தான் நின்று கொண்டிருப்பதைப் போன்ற கட் அவுட் ஒன்றையும் வைத்துள்ளார்.

இவற்றைப் பார்க்கும் அந்த குழந்தை, அது கட் -அவுட் என அறியாமல், தனது தாய்தான் நிற்கிறார் என நினைத்து மகிழ்ந்து, அழாமல் உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.