மாநில செய்திகள்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு: குயின் தொடர் இணையத்தில் வெளியானது + "||" + The Queen series was released on the Internet

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு: குயின் தொடர் இணையத்தில் வெளியானது

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு: குயின் தொடர் இணையத்தில் வெளியானது
மறைந்த முதலமைச்சர் ஜெயலலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குயின் தொடர் இன்று இணையத்தில் வெளியானது.
சென்னை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் 'குயின்' என்ற இணைய தொடரை இயக்கியுள்ளார். இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த இணையதள தொடரை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில்  ஜோசப் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் மக்களவை தேர்தலின்போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்ததை அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை மனு அளித்திருப்பதாகவும், அதை பரிசீலித்து குயின் தொடரை வெளியிட தடைவிதிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில்  குயின் தொடர்  இன்று  இணையத்தில் வெளியானது.  இந்த இணையத் தொடரை மும்பையைச் சோ்ந்த எம்எக்ஸ் பிளேயா் நிறுவனம் இணையதளத்தில் முழுவதுமாக வெளியிட்டுள்ளது.