மாநில செய்திகள்

பாலியல் குற்றங்களுக்கு திரைப்படங்களில் இடம் பெறும் காட்சிகளே காரணம் கனிமொழி தாக்கு: துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள் குஷ்பு பதிலடி + "||" + crimes are the reason behind the scenes in the movies Kanimozhi - Brave confront Khushboo

பாலியல் குற்றங்களுக்கு திரைப்படங்களில் இடம் பெறும் காட்சிகளே காரணம் கனிமொழி தாக்கு: துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள் குஷ்பு பதிலடி

பாலியல் குற்றங்களுக்கு திரைப்படங்களில் இடம் பெறும் காட்சிகளே காரணம் கனிமொழி தாக்கு: துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள் குஷ்பு பதிலடி
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு திரைப்படங்களில் இடம் பெறும் காட்சிகளே காரணம் என கூறிய கனிமொழி, துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள் என குஷ்பு பதிலடி கொடுத்தார்.
சென்னை,

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு திரைப்படங்களில் பெண்கள் குறித்து இடம் பெறும் காட்சிகளே காரணம். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.  பாலியல் கல்வி மிகவும் அவசியம், அதை அரசு கொண்டு வரவேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், செனையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய மக்கள் தொடர்பாளருமான குஷ்பு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சினிமாவையும், டாஸ்மாக்கையும் மட்டும் குற்றம் சாட்டாதீர்கள். தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பவர்களை துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள் என கனிமொழிக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

பெண்களுக்கு எதிராக குரல்கள் வலுத்து வரும் நிலையில் தமிழகத்தின் முக்கிய பெண் ஆளுமைகள் இருவேறு கருத்துக்களை தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.