சினிமா செய்திகள்

கமல்ஹாசனை சந்தித்து விளக்கம் அளித்தேன் - ராகவா லாரன்ஸ் டுவிட்டரில் பதிவு + "||" + I met Kamal Haasan and explained Raghava Lawrence ‏

கமல்ஹாசனை சந்தித்து விளக்கம் அளித்தேன் - ராகவா லாரன்ஸ் டுவிட்டரில் பதிவு

கமல்ஹாசனை சந்தித்து விளக்கம் அளித்தேன் - ராகவா லாரன்ஸ் டுவிட்டரில் பதிவு
நான் கூறிய கருத்து தொடர்பாக கமல்ஹாசனை நேரில் சந்தித்து விளக்கமளித்தேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,

நடிகர் ராகவா லாரன்ஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது. எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கமளித்துள்ளேன்.

இந்நிலையில், இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை நான் நேரில் சந்தித்து விளக்கமளித்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியினையும், என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. எனது கருத்துகளுக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை - நடிகர் ராகவா லாரன்ஸ்
தான் பேசிய கருத்துகளுக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.