தேசிய செய்திகள்

மோடி அரசு 6 மாதங்களில் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு + "||" + In 6 months Modi govt has wrecked India's economy P Chidambaram

மோடி அரசு 6 மாதங்களில் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மோடி அரசு 6 மாதங்களில் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
மோடி தலைமையிலான அரசு 6 மாதங்களில், நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
புதுடெல்லி,

புதுடெல்லியில் ராம்லீலா மைதானத்தில் 'நாட்டை காப்போம்' என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி ஒன்று இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்,

மோடி தலைமையிலான அரசு  ஆறே மாதங்களில்,  நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது. ஆனால் நிதி மந்திரியோ எல்லாம் சரியாக இருப்பதாகவும், உலக அளவில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளதாக ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து வருகிறார். பொருளாதார வீழ்ச்சியை தடுக்க மத்திய அரசுக்கு எந்த திட்டமும் இல்லை என்று அவர் கூறினார்.