தேசிய செய்திகள்

தாஜ் கோரமண்டல் விடுதியின் ஊழியரை சந்திக்க ஆசை - சச்சின் தெண்டுல்கர் தமிழில் டுவிட் + "||" + I had met a staffer at Taj Coromandel Sachin Tendulkar ‏

தாஜ் கோரமண்டல் விடுதியின் ஊழியரை சந்திக்க ஆசை - சச்சின் தெண்டுல்கர் தமிழில் டுவிட்

தாஜ் கோரமண்டல் விடுதியின் ஊழியரை சந்திக்க ஆசை - சச்சின் தெண்டுல்கர் தமிழில் டுவிட்
டெஸ்ட் தொடரின் போது உதவிய தாஜ் கோரமண்டல் விடுதியின் ஊழியரை மீண்டும் சந்திக்க ஆசை என சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி,

தனக்கு நீண்ட நாட்களுக்கு முன்பு கைப்பட்டை பேடின் வடிவத்தை மாற்ற உதவிய  தாஜ் கோரமண்டல் விடுதியின் ஊழியர் ஒருவரை மீண்டும் சந்திக்க ஆவலாக இருப்பதாகவும், அதற்கு மக்கள் உதவுமாறும் சச்சின் தெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக சச்சின் தெண்டுல்கர் தமிழில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த டுவிட்டில், 

எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது தாஜ் கோரமண்டல் ஊழியர் ஒருவர் என்னுடைய  கைப்பட்டை பேடின் வடிவத்தை  பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்.

அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும் என  பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமணநாளையொட்டி மனைவிக்காக மாம்பழ குல்பியைத் தயாரித்த சச்சின் தெண்டுல்கர்!
திருமணநாளையொட்டி மனைவிக்காக மாம்பழ குல்பியைத் தயாரித்துள்ளதாக சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
2. மும்பையில் 4000 ஏழை எளிய மக்களுக்கு நிதியுதவி அளித்த சச்சின் தெண்டுல்கர்!
மும்பையில் வருமானமின்றி தவித்த 4000 ஏழை எளிய மக்களுக்கு சச்சின் தெண்டுல்கர் நிதியுதவி அளித்துள்ளார்.
3. தனது பழைய நாட்களை நினைவு கூர்ந்த சச்சின் தெண்டுல்கர்!
கிரிக்கெட் ஜாம்பவானா சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் தனது பழைய நாட்களை நினைவு கூர்ந்தார்.
4. எப்படி இருக்கிறது எனது புதிய தோற்றம்? ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய சச்சின் தெண்டுல்கர்
எப்படி இருக்கிறது எனது புதிய தோற்றம்? என ரசிகர்களிடம் சச்சின் தெண்டுல்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.