தேசிய செய்திகள்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தாக்குதல் நடத்த மாணவர்கள் முயற்சி + "||" + JNU VC says students tried to attack him on campus

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தாக்குதல் நடத்த மாணவர்கள் முயற்சி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தாக்குதல் நடத்த மாணவர்கள் முயற்சி
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் மீது 20 மாணவர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர்.
புதுடெல்லி,

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்களின் விடுதி கட்டணம் கடந்த சில வாரங்களுக்கு முன் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இவ்வாறு போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றும் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் மாமிடாலா ஜெகதீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தேர்வுகள் எப்படி நடக்கின்றன என காண்பதற்காக நான் சென்றேன்.  நிர்வாக அறைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபொழுது, 15 முதல் 20 மாணவர்கள் என்னை சூழ்ந்து கொண்டு, தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்க முயற்சித்தனர்.

எனினும், பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் போலீசார் என்னை மீட்டு அங்கிருந்து அழைத்து சென்றனர் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மறுவாக்கு எண்ணிக்கை நடத்த மறுத்ததால் வேட்பாளர் மகன் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி
மறுவாக்கு எண்ணிக்கை நடத்த மறுப்பு தெரிவித்ததால் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பாளரின் மகன் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. வையம்பட்டி அருகே நள்ளிரவில் பரபரப்பு அ.தி.மு.க. வேட்பாளரின் மாமனாரை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி
வையம்பட்டி அருகே அ.தி.மு.க. வேட்பாளரின் மாமனாரை நள்ளிரவில் கழுத்தை நெரித்து மர்ம கும்பல் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் போட்டி காரணமாக அவரை கொலை செய்ய முயன்றனரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. கல்லூரி பேராசிரியை மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி குழந்தை உயிரிழந்தது
கல்லூரி பேராசிரியை தனது மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதில் குழந்தை உயிரிழந்தது.
4. அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை முயற்சி மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
ஆண்டிமடத்தில் அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தபால் நிலையத்தை திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட முயற்சி
குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற திராவிடர் கழகத்தினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.