தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது + "||" + Former IAS officer Kannan Gopinathan detained for protesting against Citizenship Act

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டார்.
மும்பை,

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை கண்டித்து ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்தவர் கண்ணன் கோபிநாதன். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் மும்பை மெரின் டிரைவ் பகுதியில் ஆதரவாளர்களுடன் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மும்பை போலீசார் அவரை கைது செய்தனர்.


கண்ணன் கோபிநாதன் உள்ளிட்ட 20 பேர் அனுமதியின்றி குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாகவும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் தங்களை சட்டவிரோதமாக கைது செய்ததாக கண்ணன் கோபிநாதன் டுவிட்டரில் கூறியுள்ளார்.