தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு; அசாமில் ஊரடங்கு உத்தரவு தளர்வு + "||" + Curfew in Dibrugarh (Assam) has been relaxed from 7 am to 4 pm today

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு; அசாமில் ஊரடங்கு உத்தரவு தளர்வு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு; அசாமில் ஊரடங்கு உத்தரவு தளர்வு
அசாமில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டு உள்ளது.
திப்ரூகார்,

குடியுரிமை திருத்த சட்டம் ஆனது மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசின் முயற்சியால் கொண்டு வரப்பட்டது. இது, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014-ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்துள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிராக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த சட்டத்தால் பூர்வ குடிமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அசாம், மேகாலயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அசாமில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். மேலும், 11 பேர் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

போராட்டம் காரணமாக அப்பகுதிகளில் விமான போக்குவரத்து, பேருந்து, ரயில் சேவை என பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், மூத்த குடிமக்கள், கலைஞர்கள் என பல தரப்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இந்த நிலையில் கவுகாத்தியில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.  எனினும், திப்ரூகாரில், காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

போராட்டங்கள் சற்று ஓய்ந்துள்ள நிலையில், திப்ரூகாரில் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது.  இந்த தகவலை செய்தியாளர்களிடம் திப்ரூகார் துணை ஆணையாளர் பல்லவ் கோபால் ஜா தெரிவித்து உள்ளார்.  எனினும், இணையதள சேவையானது நாளை வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் 2-வது நாளாக பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் கூடுதலாக 135 பஸ்கள் இயக்கம்
நெல்லையில் 2-வது நாளாக நேற்று பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி கூடுதலாக 135 பஸ்கள் இயக்கப்பட்டன.
2. பிறமாவட்டங்களுக்கு 50 சதவீத பஸ்கள் இயக்கம் ரெயில் போக்குவரத்தும் தொடங்கியது
ஈரோடு மாவட்ட பணிமனைகளில் இருந்து பிறமாவட்டங்களுக்கு 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் ஈரோட்டில் இருந்து ரெயில் போக்குவரத்தும் தொடங்கியது.
3. “டைரக்டர் சொன்ன கதை ஒன்று; படமாக்கிய கதை வேறு...”
ஊரடங்கு உத்தரவு வாபஸ் ஆனபின், விஜயா புரொடக்சன்ஸ் தனது தயாரிப்பு பணியை தொடரும் என்று அந்த பட நிறுவனம் கூறுகிறது.
4. தர்மபுரி : ஊரடங்கு உத்தரவை மீறிய 70 பேர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
5. தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 20 பேர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.