தேசிய செய்திகள்

ரூ.1,300 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்; 5 இந்தியர்கள் கைது + "||" + NCB busted drugs worth of Rs.1300 Crores

ரூ.1,300 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்; 5 இந்தியர்கள் கைது

ரூ.1,300 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்; 5 இந்தியர்கள் கைது
இந்திய போதை பொருள் கட்டுப்பாடு வாரியம் ரூ.1,300 கோடி மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கோகைன், மெத்தம்பிட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் அதிகளவில் நடந்து வருகின்றன.  இவை கனடா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில், டெல்லி மண்டல பிரிவை சேர்ந்த இந்திய போதை பொருள் கட்டுப்பாடு வாரியம், சர்வதேச அளவிலான போதை பொருள் கடத்தலை தடுக்கும் முயற்சியாக 275 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.

இவற்றில் இந்தியாவில் 20 கிலோ கோக்கைன், ஆஸ்திரேலியாவில் 55 கிலோ கோக்கைன் மற்றும் 200 கிலோ மெத்தம்பிட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கடத்தலில் தொடர்புடைய 5 இந்தியர்கள், அமெரிக்கர் ஒருவர், நைஜீரிய நாட்டை சேர்ந்த 2 பேர் மற்றும் இந்தோனேசியர் ஒருவர் என 9 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதனால் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல் நடப்பது தடுக்கப்பட்டு உள்ளது.

கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு 183.9 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,300 கோடி) ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் ஆன்லைன் மூலமாக விற்பனை ரூ.1¼ கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் கேரள வாலிபர்கள் 4 பேர் கைது
பெங்களூருவில் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வந்த ரூ.1¼ கோடி போதைப்பொருடகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் முழுஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள் கட்டுப்பாட்டை மீறிய 226 வாகனங்கள் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின. ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறிய 226 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3. பாகிஸ்தானில் இருந்து ஆற்றில் மிதந்து வந்த போதை பொருட்கள் பறிமுதல்
பாகிஸ்தானில் இருந்து ஆற்றில் மிதந்து வந்த போதை பொருட்களை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
4. சாணார்பட்டி அருகே மயில் வேட்டையாடிய 2 பேர் கைது துப்பாக்கிகள் பறிமுதல்
சாணார்பட்டி அருகே மயில் வேட்டையாடிய 2 பேர் கைது துப்பாக்கிகள் பறிமுதல்.
5. திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு காரில் கடத்தப்பட்ட 19 கஞ்சா பண்டல்கள்- ரூ.90 ஆயிரம் பறிமுதல்
திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 19 கஞ்சா பண்டல்கள், ரூ.90 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்து, சிக்கிய ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.