உலக செய்திகள்

நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி + "||" + Bus crash kills at least 14 in central Nepal

நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி

நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி
நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகினர்.
காத்மாண்டு,

நேபாளத்தில் உள்ள சிந்துபால்சவுக் மாவட்டத்தில் உள்ள சுன்கோஷி பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் பேருந்து ஒன்று சாலைக்கு அருகே இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் சிக்கியவர்களை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.

அந்த பேருந்தில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் காலின்சவுக் பகுதியில் உள்ள புனித தளத்தில் இருந்து பக்தாபூர் நகருக்கு சென்று கொண்டிருந்தனர்.

அந்த வழியில் இருக்கும் ஆபத்தான வளைவு ஒன்றில் திரும்பிய போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசமான சாலைகள் மற்றும் ஆபத்தான வளைவுகளால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொடைக்கானல் அருகே மின்கம்பத்தில் கார் மோதி விபத்து கேரள தம்பதிகள் உயிர் தப்பினர்
கொடைக்கானல் அருகே மின்கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கேரள தம்பதிகள் உயிர் தப்பினர்.
2. பஸ், ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்
பஸ், ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
3. அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி
அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 2 விமானிகள் பலியாயினர்.
4. டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 4 மாணவர்கள் உள்பட 5 பேர் பலி; 13 பேர் காயம்
டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 4 மாணவர்கள் உள்பட 5 பேர் பலியாயினர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
5. நேபாளத்தில் இறந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு 3 வயது சிறுவன் இறுதி சடங்கு: கேரளாவில் சோகம்
நேபாளத்தில் இறந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு 3 வயது சிறுவன் இறுதி சடங்கு செய்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியது.