மாநில செய்திகள்

மாணவர்களுக்கு நாளைக்குள் இலவச மடிக்கணினி வழங்க உத்தரவு + "||" + Free laptop for students; Order to deliver within tomorrow

மாணவர்களுக்கு நாளைக்குள் இலவச மடிக்கணினி வழங்க உத்தரவு

மாணவர்களுக்கு நாளைக்குள் இலவச மடிக்கணினி வழங்க உத்தரவு
12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு நாளைக்குள் மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-18, 2018-19 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு நாளைக்குள் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களிடம் போனஃபைட் சான்றிதழ் பெற்றுக்கொண்டு மடிக்கணினி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடையாதவர்களுக்கும், உயர்கல்வி பயிலாதவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்ட பிறகு, கூடுதலாக தேவைப்பட்டால் டிசம்பர் 17 க்குள் தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கரூர் அருகே தலைமை ஆசிரியராக பணி செய்து அசத்திய மாணவ–மாணவிகள்
கரூர் அருகே வாய்ப்பாடு ஒப்புவித்தல் போட்டியில் மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று அசத்தினர்.
2. படிப்பில் கலக்கும் நரிக்குறவர் காலனி மாணவ -மாணவிகள் ஊசி, பாசி விற்க மாட்டோம், டாக்டர் ஆவோம் என்கின்றனர்
நரிக்குறவர் காலனியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிப்பில் கலக்கி வருகின்றனர். அவர்கள் ஊசி, பாசி விற்கமாட்டோம், டாக்டர் ஆவோம் என்று கூறுகின்றனர்.
3. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேரடி ஒளிபரப்பு: மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை கண்டுகளித்த மாணவர்கள்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை பள்ளி மாணவர்கள் கண்டுகளித்தனர்.
4. அரசு பள்ளிக்கு சொந்த கட்டிடம் இல்லாத அவலம்: குடியிருப்பில், குறுகலான அறையில் படிக்கும் மாணவர்கள்
ஒரத்தநாட்டில் அரசு பள்ளிக்கு சொந்த கட்டிடம் இல்லாததால் அருகே உள்ள குடியிருப்பில் மாணவர்கள் குறுகலான அறையில் படித்து வருகிறார்கள். எனவே புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. கொடைக்கானலில், இலவச மடிக்கணினி கேட்டு மாணவர்கள் சாலைமறியல்
கொடைக்கானலில் இலவச மடிக்கணினி கேட்டு மாணவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.