தேசிய செய்திகள்

நித்யானந்தா இருக்கும் இடத்தை தெரியப்படுத்துங்கள் - ‘இன்டர்போல்’, சி.பி.ஐ.க்கு கர்நாடக போலீசார் கடிதம் + "||" + Let us know where Nithyananda is - Karnataka police letter to Interpol, CBI

நித்யானந்தா இருக்கும் இடத்தை தெரியப்படுத்துங்கள் - ‘இன்டர்போல்’, சி.பி.ஐ.க்கு கர்நாடக போலீசார் கடிதம்

நித்யானந்தா இருக்கும் இடத்தை தெரியப்படுத்துங்கள் - ‘இன்டர்போல்’, சி.பி.ஐ.க்கு கர்நாடக போலீசார் கடிதம்
நித்யானந்தா இருக்கும் இடத்தை தெரியப்படுத்துங்கள் என ‘இன்டர்போல்’, சி.பி.ஐ.க்கு கர்நாடக போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
பெங்களூரு,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர்கள் கடத்தப்பட்ட வழக்கில் நித்யானந்தாவை, அந்த மாநில போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். அதே நேரத்தில் நித்யானந்தா இருக்கும் இடம் குறித்த விவரங்களை கர்நாடக ஐகோர்ட்டில் தெரிவிக்கும்படி அரசுக்கும், போலீசாருக்கும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். ஏற்கனவே பெண் சீடர் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக நித்யானந்தா மீது கர்நாடக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். தற்போது கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் நித்யானந்தா இருக்கும் இடம் குறித்து சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


இதற்கிடையே நித்யானந்தா இருக்கும் இடம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள ‘இன்டர்போல்’ போலீசாரின் உதவியை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் நாடியுள்ளனர். இதற்காக நித்யானந்தா இருக்கும் இடம் பற்றிய தகவல்களை தெரிவிக்கும்படி ‘இன்டர்போல்’ போலீசாருக்கு, கர்நாடக சி.ஐ.டி. போலீசார் கடிதம் எழுதி உள்ளனர். அதேபோல, சி.பி.ஐ.க்கும் அவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரும் மனு மீது நாளை தீர்ப்பு
கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரும் மனு மீது நாளை (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
2. கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரும் மனு மீது நாளை தீர்ப்பு
கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரும் மனு மீது நாளை (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
3. நித்யானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் வழங்கியது இண்டர்போல்
குஜராத் ஆசிரமத்தில் 2 சிறுமிகள் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீஸ் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
4. பத்திரிகையாளர் கொலை வழக்கு; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்
பத்திரிகையாளர் கொலை வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
5. வங்கி அதிகாரிகள் துணையுடன் ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்ட ரூ.1,038 கோடி கருப்பு பணம்
கடந்த 2014-2015 நிதியாண்டில், ஹாங்காங்குக்கு ரூ.1,038 கோடி கருப்பு பணம் அனுப்பப்பட்டு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. சென்னை நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.