மாநில செய்திகள்

எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே போராட்டத்தைத் தூண்டுகின்றன - எடப்பாடி பழனிசாமி + "||" + Opposition parties deliberately provoke struggle - Edappadi Palanisamy

எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே போராட்டத்தைத் தூண்டுகின்றன - எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே போராட்டத்தைத் தூண்டுகின்றன - எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே போராட்டத்தை தூண்டுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 23-ம் தேதி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் உள்ளாட்சி தேர்தலில் எந்த பாதிப்பும் வராது என்று தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர் சந்திப்பின் போது அவர் பேசியதாவது:-

“எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே போராட்டத்தை தூண்டுகின்றன. மாநில அரசை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கை பேணி  பாதுகாக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடைபெறும். குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் உள்ளாட்சி தேர்தலில் எந்த பாதிப்பும் வராது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இலங்கை வாழ் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பதே எங்களின் கொள்கை.

ஜனநாயக நாட்டில் அகிம்சை முறைப்படி போராட்டம் நடத்தினால் பிரச்சினை ஏற்படாது” என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவந்த சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நிறைவு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் நிறைவடைந்தது நீதிமன்றம் தடை வித்திருப்பதால் சட்டப்பேரவையை முற்றுகையிட செல்லவில்லை
2. மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆலோசனை ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுகோள்
மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தினர்.
3. எடப்பாடி பழனிசாமியை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விமர்சிப்பதா? - மு.க.ஸ்டாலினுக்கு, ஆர்.பி.உதயகுமார் கண்டனம்
‘காவிரி டெல்டாவை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விமர்சிப்பதா?’, என்று மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4. காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கமாட்டோம் என்று கூறிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
5. சேலத்தில் ஐ.பி.எல்.போட்டிகளை நடத்த அரசு துணை நிற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த அரசு துணை நிற்கும் என்று கூறினார்.