தேசிய செய்திகள்

குடியுரிமையை நிரூபிக்க 1971-க்கு முந்தைய ஆவணங்கள் தேவையில்லை - மத்திய உள்துறை அமைச்சகம் + "||" + Indian citizens do not have to prove any ancestry by presenting documents dating back to pre-1971 situation

குடியுரிமையை நிரூபிக்க 1971-க்கு முந்தைய ஆவணங்கள் தேவையில்லை - மத்திய உள்துறை அமைச்சகம்

குடியுரிமையை நிரூபிக்க 1971-க்கு முந்தைய ஆவணங்கள் தேவையில்லை - மத்திய உள்துறை அமைச்சகம்
இந்திய குடியுரிமையை நிரூபிக்க தங்கள் வம்சாவளியினரின் பூர்வீக ஆவணங்களை சமர்பிக்க வேண்டியதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய குடியுரிமையை நிரூபிக்க இந்தியர்கள் தங்கள் வம்சாவளியினரின் பூர்வீக ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியர்கள் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அதில், “பிறந்த தேதி அல்லது பிறந்த இடம் அல்லது இரண்டும் தொடர்பான எந்தவொரு ஆவணத்தையும் கொடுத்து இந்தியாவின் குடியுரிமை நிரூபிக்கப்படலாம். எந்தவொரு இந்திய குடிமகனும் தேவையற்ற முறையில் துன்புறுத்தப்படுவதோ அல்லது சிரமத்திற்கு ஆட்படுவதோ இல்லை என்பதை உறுதிப்படுத்த இதுபோன்ற பொதுவான ஆவணங்கள் பயன்படும்.

1971-க்கு முந்தைய தங்கள் முன்னோர்களின் அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை இந்திய குடிமக்கள் நிரூபிக்க வேண்டியதில்லை.

கல்வி பயிலாதவர்கள் மற்றும் எந்த ஆவணங்களும் இல்லாதவர்கள் தங்கள்  சமூக உறுப்பினர்களால் ஆதரிக்கப்படும் உள்ளூர் சான்றுகளை அதிகாரிகள்  ஏற்றுக்கொள்ளலாம். இதுகுறித்த திட்டங்கள் வகுத்த பின்னர் தான் இந்த செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு பாய், தலையணையுடன் கலெக்டர் அலுவலகத்தில் முஸ்லிம்கள் குடியேற முயற்சி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முஸ்லிம்கள் குடியேற முயன்றதால் பரபரப்பு நிலவியது. அப்போது அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1,100 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. குளச்சலில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் மாணவர் இயக்கங்கள் சார்பில் நடந்தது
குளச்சல் மற்றும் அழகியமண்டபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, மாணவர்கள் இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
3. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மதுரை ஒத்தக்கடையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
4. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 7 இடங்களில் கையெழுத்து இயக்கம்
மாவட்டத்தில் மொத்தம் 7 இடங்களில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
5. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பெண்கள் கோலமிட்டு எதிர்ப்பு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பெண்கள் கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.