தேசிய செய்திகள்

பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல் இல்லை: முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு + "||" + National Citizens Record in Bihar - Announced by Chief Minister Nitish Kumar

பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல் இல்லை: முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு

பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல் இல்லை: முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு
பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல் இல்லை என முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பாட்னா,

அசாம் மாநிலத்தில் 1951-க்கு பிறகு சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) தயாரித்து வெளியிடப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த பட்டியலில் 19 லட்சம் பேரது பெயர்கள் விடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.


இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார். இதற்கு பரவலாக எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாட்னாவில் நேற்று, “தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் பீகாரில் அமல்படுத்தப்படுமா?” என பா.ஜனதா கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், அந்த மாநில முதல்-மந்திரியுமான நிதிஷ்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “எதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு? அதெல்லாம் அமல்படுத்தப்பட மாட்டாது” என பதில் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. இன்ஸ்பெக்டர் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி போராட்டம் ; போலீசார் தடியடி
பீகாரில் இன்ஸ்பெக்டர் தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரி போராட்டம் நடத்தியவர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர்.
2. பீகாரில் என்பிஆர் பணிகள் மே 15 ஆம் தேதி தொடங்கும்; துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி
பீகாரில் என்பிஆர் பணிகள் மே 15 ஆம் தேதி தொடங்கும் என்று துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.
3. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் பீகார், டெல்லி மாநிலங்களில் பா.ஜனதா தோல்வியை சந்திக்கும் பிரிதிவிராஜ் சவான் பேட்டி
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் பீகார், டெல்லி மாநிலங்களில் பாரதீய ஜனதா தோல்வியை சந்திக்கும் என்று பிரிதிவிராஜ் சவான் கூறினார்.
4. காங். போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கு ராகுல் காந்தி நன்றி
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான காங்கிரஸ் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
5. மேற்கு வங்காளத்தில் என்.ஆர்.சிக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது: மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் என்.ஆர்.சிக்கு ஒரு போதும் அனுமதி கிடையாது என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.