மாநில செய்திகள்

சுற்றுலா துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி + "||" + Tamil Nadu tops tourism industry - Chief Minister Edappadi Palanisamy

சுற்றுலா துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சுற்றுலா துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சுற்றுலா துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை தீவுக்திடலில் 46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார். இந்த பொருட்காட்சியில் அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து விளக்கும் அரசு அரங்குகள், 100-க்கும் மேற்பட்ட வணிக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுற்றுலா துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் தமிழகத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த சுற்றுலா பொருட்காட்சி இன்னும் 70 நாட்கள்  நடைபெறும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. புதிதாக 7 கலை கல்லூரிகள் வரும் ஆண்டு முதல் செயல்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
7 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரும் கல்வி ஆண்டு முதல் செயல்படும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
3. ‘துப்புரவு செய்பவர்கள் தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்’ - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
4. கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்படவில்லை-முதலமைச்சர் பழனிசாமி
கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்படவில்லை. தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்படவில்லை - என சட்டபேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
5. காவல் துறை பயன்பாட்டுக்கு 2,271 வாகனங்கள் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
ரூ.95.58 கோடி மதிப்பீட்டில் காவல் துறையினரின் பயன்பாட்டுக்காக வாங்கப்பட்ட 2,271 வாகனங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-