தேசிய செய்திகள்

அமித்ஷாவை கொல்கத்தாவுக்குள் அனுமதிக்க மாட்டோம்: மேற்கு வங்காள மந்திரி மிரட்டல் + "||" + We will not allow Amit Shah into Kolkata: West Bengal Minister of Intimidation

அமித்ஷாவை கொல்கத்தாவுக்குள் அனுமதிக்க மாட்டோம்: மேற்கு வங்காள மந்திரி மிரட்டல்

அமித்ஷாவை கொல்கத்தாவுக்குள் அனுமதிக்க மாட்டோம்: மேற்கு வங்காள மந்திரி மிரட்டல்
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை அமித்ஷாவை கொல்கத்தாவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என மேற்கு வங்காள மந்திரி மிரட்டல் விடுத்துள்ளார்.
கொல்கத்தா,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சாலையில் இறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவரது அரசில் மந்திரியாக இருக்கும் மாநில ஜாமியாத்-உல்மே-இ-ஹிந்த் என்ற அமைப்பின் தலைவர் சித்திக்குல்லா சவுத்திரி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கொல்கத்தாவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என மிரட்டும் வகையில் கூறி உள்ளார்.


கொல்கத்தாவில் நேற்று நடந்த பேரணியில் அவர் பேசுகையில், ‘மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கொல்கத்தா நகருக்குள் அனுமதிக்க மாட்டோம். அவர் வரும்போதெல்லாம் விமான நிலையத்தில் ஒரு லட்சம் தொண்டர்களை திரட்டி அவரை விமான நிலையத்தில் இருந்துவெளியேர விடாமல் தடுப்போம்’ என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. என்.பி.ஆர். குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை - அமித்ஷா
என்.பி.ஆர்.குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என மாநிலங்களவையில், டெல்லி கலவரம் தொடர்பான விவாதத்தில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
2. டெல்லி வன்முறை; மக்களவையில் இன்று பதிலளிக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
மக்களவையில் டெல்லி வன்முறை குறித்த விவாதத்தில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்து பேசுவார் என்று கூறப்பட்டுள்ளது.
3. டெல்லி வன்முறை சம்பவம்: நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கிறார் - அமித்ஷா
டெல்லி வன்முறை சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் வரும் 11ம் தேதி நடக்கும் விவாதத்தில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்க உள்ளார்.
4. அமித்ஷா பதவி விலக‌க்கோரி ராகுல் காந்தி தலைமையில் காங். எம்பிக்கள் போராட்டம்
அமித்ஷா பதவி விலக‌க்கோரி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. அமித்ஷா பதவி விலகக்கோரி காங்கிரஸ், திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்
அமித்ஷா பதவி விலகக்கோரி காங்கிரஸ், திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.