உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் 109 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு - ராணுவம் அதிரடி + "||" + Security forces attack in Afghanistan: 109   Terrorists killed

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் 109 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு - ராணுவம் அதிரடி

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் 109 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு - ராணுவம் அதிரடி
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் ஒரே நாளில் 109 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்தாலும், அங்கு பயங்கரவாத தாக்குதல் ஓய்ந்தபாடில்லை.

போலீசார், ராணுவத்தினர் மற்றும் அமெரிக்க வீரர்களை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் அந்த நாட்டு ராணுவமும் பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க அவர்களின் நிலைகளை குறிவைத்து தரைவழியாகவும், வான்வழியாகவும் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அந்த வகையில் நாடு முழுவதும் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதல்களில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த தகவலை அந்த நாட்டின் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஆப்கானிஸ்தானின் 15 மாகாணங்களில் உள்ள 18 இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசு படையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அப்போது அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்ட மோதல்களில் 109 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் சுமார் 50 பயங்கரவாதிகள் படுகாயங்களுடன் தப்பி ஓடினர். 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ராணுவம் நடத்திய தாக்குதல்கள் பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகள், ஆயுதகிடங்குகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன. மேலும் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

எனினும் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் தலீபான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களா? அல்லது வேறு ஏதும் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளா? என்ற தகவலை ராணுவ அமைச்சகம் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பால்க் மாகாணத்தில் தாவ்லத் அபாத் மாவட்டத்தில் இருக்கும் ராணுவ முகாம் மீது நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

உடனடியாக ராணுவவீரர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. எனினும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 6 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். அதே சமயம் இந்த சண்டையில் பயங்கரவாதிகள் சிலரும் கொல்லப்பட்டனர். ஆனால் எத்தனை பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் தலீபான் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தத்துக்கு மத்தியில் துப்பாக்கி முனையில் கவர்னர் கடத்தல்
ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தத்துக்கு மத்தியில் துப்பாக்கி முனையில் கவர்னர் கடத்தப்பட்டார்.
2. ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தம்: மக்கள் ஆடிப்பாடி கொண்டாட்டம்
ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை மக்கள் ஆடிப்பாடி கொண்டாடினர்.
3. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்: நீதிபதி சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பயங்கரவாதிகள் தலைமை நீதிபதியை சுட்டுக்கொன்றனர்.
4. ஆப்கானிஸ்தானில் ஏவுகணை தாக்குதலில் அப்பாவி மக்கள் 8 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் ஏவுகணை தாக்குதலில் அப்பாவி மக்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5. ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.