மாநில செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு + "||" + The decline of the water level in the Mettur dam

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது.
மேட்டூர்,

கடந்த சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால், 120 அடி முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியது. தொடர்ந்து 43 நாட்கள் தனது முழு கொள்ளளவில் இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 23 ஆம் தேதி 119.74 அடியாக சரிந்தது.

அதனை தொடர்ந்து நேற்று 119.27 ஆக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 118.79 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதலாக திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரியத் தொடங்கி உள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 3,881 கனஅடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் அணையில் தற்போது 91.55 டிஎம்சி  நீர் இருப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 87 பண்ணை குட்டைகள் அமைக்க முடிவு அதிகாரிகள் தகவல்
கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 87 பண்ணை குட்டைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டது.
3. மேட்டூர் அணை நிலவரம்; நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு குறைந்துள்ளது.
4. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
5. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,600 கன அடி நீர்திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.