மாநில செய்திகள்

இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பாஜக கவனம் செலுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின் + "||" + BJP should focus on improving Indian economy - DMK leader Stalin

இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பாஜக கவனம் செலுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்

இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பாஜக கவனம் செலுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

இந்திய பொருளாதார வளர்ச்சி 4.5% ஆக சரிந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார். 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்திய பொருளாதார வளர்ச்சி 4.5% ஆக சரிந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக அரசு தனது 6 ஆண்டு கால ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை என்றும் தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையால் தமிழக வளர்ச்சியும் குன்றியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், “பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு மக்களைப் போராடத் தூண்டுவது, பின் அதை ஒடுக்குவது போன்ற நடவடிக்கைகளை கைவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும். அமைதியை விரும்பும் மக்கள் மத்திய, மாநில அரசுகளிடம் அதை தான் எதிர்பார்க்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: மு.க ஸ்டாலின்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. கொரோனா வைரஸ் தாக்கம்: இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை தரமதிப்பீட்டு நிறுவனங்கள் குறைத்துள்ளன
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்கள் குறைத்துள்ளன.
3. திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வானால் அடுத்த பொருளாளர் யார்?
பொதுச்செயலாளராக துரை முருகன் தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அடுத்த பொருளாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
4. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததால் திமுக வெளிநடப்பு
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
5. சென்னையில் இன்று மாலை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது.