தேசிய செய்திகள்

பசுக்களுக்கான ஜோடிகளை தேர்ந்தெடுக்க ‘மேட்ரிமோனியல்’ இணையதளம் தொடக்கம் + "||" + MP Prepares Matrimonial Data Of 'Desired Bulls' For Farmers Finding Perfect Match For Cows

பசுக்களுக்கான ஜோடிகளை தேர்ந்தெடுக்க ‘மேட்ரிமோனியல்’ இணையதளம் தொடக்கம்

பசுக்களுக்கான ஜோடிகளை தேர்ந்தெடுக்க ‘மேட்ரிமோனியல்’ இணையதளம் தொடக்கம்
மத்திய பிரதேசத்தில் பசுக்களுக்கான ஜோடிகளை தேர்ந்தெடுக்க ‘மேட்ரிமோனியல்’ போன்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
போபால்,

இந்தியாவில் அண்மைக் காலமாக மாடுகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை சில மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

உத்தர பிரதேசத்தில் பசுக்கள் கணக்கெடுப்பு நடைபெற்றது. மேலும் குளிர் காலத்தில் பசுக்களை பாதுகாக்க மாடுகளுக்கு கம்பளி போர்வைகள் போர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசத்தில் காளைகள் குறித்த விவரங்களை பதிவு செய்து இணையதளம் ஒன்றை அந்த மாநிலத்தின் கால்நடை வளர்ப்பு துறை வெளியிட்டுள்ளது.

அந்த இணையதளத்தில் காளைகளின் புகைப்படம், குறியீட்டு எண், இனம், மரபணு கோளாறுகளுக்கான சோதனை செய்யப்பட்ட விவரங்கள் உள்ளிட்டவை அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

cssbhopal.com என்ற அந்த இணையதளம் வாயிலாக விவசாயிகள் தங்கள் பசுக்களுக்கான இணை காளை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள ‘மேட்ரிமோனியல்’ இணையதளம் போல் இதை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இணையதளம் உருவாக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கொரோனா குறித்த வதந்திகளை கட்டுப்படுத்தி மக்களுக்கு உண்மையான தகவல்களை தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய இணையதளத்தை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
2. மணப்பாறை அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி
மணப்பாறை அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
3. தாலுகா அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை: வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா மாறுதல் பெறலாம் - தமிழக அரசு புதிய நடைமுறை
தாலுகா அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா மாறுதல் பெறலாம் என்ற புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
4. ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகள் பல பெற்ற கொம்பன் காளையை கோவிலுக்கு நேர்ந்துவிட்ட உரிமையாளர்
ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகள் பல பெற்ற கொம்பன் காளையை அதன் உரிமையாளர் கோவிலுக்கு நேர்ந்து விட்டுள்ளார். இதனால் அந்த காளையை அடக்க நினைத்த மாடுபிடி வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
5. ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளை இணையதளத்தின் மூலம் அறியலாம் - கலெக்டர் தகவல்
ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் இணையதளத்தின் மூலம் அறியலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.