தேசிய செய்திகள்

போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் - பிரதமர் மோடி + "||" + People who damaged public property in protest should introspect if what they did was right

போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் - பிரதமர் மோடி

போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் - பிரதமர் மோடி
போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள லோக்பவனில் முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா கட்சியை நிறுவியவருமான வாஜ்பாயின் 25 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

வாஜ்பாயின் பிறந்த தினமான இன்று லக்னோவில் உள்ள அவரது சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது லக்னோவில் அமையவுள்ள வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய பிரதமர் மோடி சுகாதாரம், நோய் தடுப்பு மற்றும் அனைவருக்கும் மருத்துவ வசதி இவைதான் நமது குறிக்கோள் என்று கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது;-

“ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட விவகாரங்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளன. 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கவும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 130 கோடி இந்தியர்களும் இது போன்ற சவால்களுக்கு தன்னம்பிக்கையுடன் தீர்வு கண்டுள்ளனர்.

தரமான சாலைகள், போக்குவரத்து மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் உள்ளிட்டவை நமது உரிமையாகும். அவற்றை பாதுகாப்பது நமது கடமையாகும்.

தரமான கல்வி பெறுவது நமது உரிமையாகும். அந்த கல்வி நிறுவனங்களை பாதுகாப்பதும், ஆசிரியர்களை மதிப்பதும் நமது கடமையாகும்.

பாதுகாப்பான சுற்றுப்புறம் என்பது நமது உரிமையாகும். காவல்துறையினரின் செயல்பாடுகளை மதிப்பது நமது கடமையாகும்.

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களும், வன்முறையில் ஈடுபட்டவர்களும் தாங்கள் செய்தது சரிதானா? என்று தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘மோடியின் அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும்’ - கோலி வேண்டுகோள்
மோடியின் அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. டெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு
டெல்லி வன்முறைக்கு பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வடைந்து உள்ளது.
3. டெல்லியில் வன்முறை: தேசத்துரோகிகளை நேரடியாக மேலே அனுப்பும் பணி தொடக்கம் - பா.ஜனதா எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை
டெல்லியில் வன்முறை தொடர்பாக, தேசத்துரோகிகளை நேரடியாக மேலே அனுப்பும் பணி தொடங்கி உள்ளதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. கூறிய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
4. மோடியும் அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் இல்லை ; சிவசேனா
‘மோடியும், அமித்‌ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல’ என சிவசேனா தெரிவித்து உள்ளது.
5. குடியுரிமை சட்ட போராட்டத்தில் வன்முறை: 154 பிரபலங்கள் ஜனாதிபதியிடம் மனு
குடியுரிமை சட்ட போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, 154 பிரபலங்கள் ஜனாதிபதியிடம் மனு அளித்தனர்.