தேசிய செய்திகள்

மோடி, ஆர்.எஸ்.எஸ்.சின் பிரதமர் - ராகுல்காந்தி கடும் தாக்கு + "||" + Modi, the Prime Minister of the RSS Rahul Gandhi attack

மோடி, ஆர்.எஸ்.எஸ்.சின் பிரதமர் - ராகுல்காந்தி கடும் தாக்கு

மோடி, ஆர்.எஸ்.எஸ்.சின் பிரதமர் - ராகுல்காந்தி கடும் தாக்கு
தடுப்பு முகாம்கள் இல்லை என ஆர்.எஸ்.எஸ்.சின் பிரதமர், பாரத மாதாவிடம் பொய் சொல்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி,

பிரதமர் மோடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி ராமலீலா மைதானத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

தடுப்பு முகாம்களுக்கு முஸ்லிம்கள் அனுப்பப்படுவார்கள் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், நகர்ப்புற நக்சல்களும் வதந்தி பரப்பி வருகிறார்கள். முஸ்லிம்களை யாரும் தடுப்பு முகாம்களுக்கு அனுப்ப மாட்டார்கள். தடுப்பு முகாம்களே நாட்டில் இல்லை.


மேலும், தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வருவது பற்றி நாங்கள் ஆலோசிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில், தடுப்பு முகாம்கள் இல்லை என மோடி பொய் சொல்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் இந்தியில் ஒரு பதிவு வெளியிட்டார். ‘பொய் பொய் பொய்’ என்ற ஹேஷ்டேக்குடன், “ஆர்.எஸ்.எஸ்.சின் பிரதமர், பாரத மாதாவிடம் பொய் சொல்கிறார்” என்று அதில் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அசாம் மாநிலம் மடியா என்ற இடத்தில் தடுப்பு முகாம் கட்டப்பட்டு வருவது போன்ற வீடியோ படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா சார்பில் அதன் பொதுச்செயலாளர் சம்பித் பத்ரா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

ராகுல் காந்தியிடம் நாகரிகமான வார்த்தைகளை எதிர்பார்ப்பது தவறாகி விடும். மக்கள் புத்திசாலிகள். பொய்யரையும், செயல்படுபவரையும் அவர்கள் வேறுபடுத்தி பார்ப்பார்கள். ராகுல் காந்தியை பொய்யராகவும், பிரதமர் மோடியை செயல்படுபவராகவும் பார்ப்பார்கள்.

ராகுல் காந்தி, பொய்யர்களின் தலைவராக உள்ளார். அவர் கூறிய தடுப்பு முகாம், 2011-ம் ஆண்டு அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மோடி பகிர்ந்த யோகா வீடியோவுக்கு இவான்கா டிரம்ப் பாராட்டு “அற்புதமானது”
பிரதமர் மோடி பகிர்ந்து கொண்ட யோகா வீடியோ அற்புதமானது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகளான இவான்கா பாராட்டு தெரிவித்துள்ளார்.
2. ‘மோடியின் அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும்’ - கோலி வேண்டுகோள்
மோடியின் அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. மோடியும் அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் இல்லை ; சிவசேனா
‘மோடியும், அமித்‌ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல’ என சிவசேனா தெரிவித்து உள்ளது.
4. மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு வீடியோ: சிவசேனா கண்டனம்
மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்டதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.
5. நடிகை சபானா ஆஸ்மியின் விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி டுவீட்
நடிகை சபானா ஆஸ்மி விபத்தில் காயமடைந்தது குறித்த செய்தி வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.