மாநில செய்திகள்

இலங்கை சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் - மு.க.ஸ்டாலின் கவலை + "||" + National Anthem Only in Sinhala Language on Sri Lanka's Independence Day - Stalin's concern

இலங்கை சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் - மு.க.ஸ்டாலின் கவலை

இலங்கை சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் - மு.க.ஸ்டாலின் கவலை
இலங்கையில் சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்பது கவலையளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,

இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி, அந்நாட்டின் 72-வது சுதந்திர தின விழா  கொண்டாடப்படுகிறது. வழக்கமாக சுதந்திர தினத்தன்று சிங்களம், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு வந்த நிலையில், வரும் ஆண்டு சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று அந்நாட்டு நில மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருக்கும்போதும், ஒரே மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடப்படுவதை போன்று இலங்கையிலும் ஒரு மொழியில் மட்டும் இனி தேசிய கீதம் பாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பிற்கு இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும் அரசியல் தலைவர்கள் இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 

“இலங்கையில் சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்பது கவலையளிக்கிறது.

இத்தகைய செயல்பாடுகள் இலங்கையில் வாழும் தமிழர்களை மேலும் ஒதுக்கி வைக்கும்.

இந்திய பிரதமர் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக இதில் தலையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் ; அமெரிக்காவுக்கு இலங்கை கோரிக்கை
ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
2. இலங்கை-ஜிம்பாப்வே அணிகளுக்கிடையே நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவானது
இலங்கை -ஜிம்பாப்வே அணிகளுக்கிடையே நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவானது. இதன்முலம் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
3. இலங்கையில் சீதைக்கு கோவில்: மத்தியபிரதேச காங்கிரஸ் அரசு கட்டுகிறது
இலங்கையில் மத்தியபிரதேச காங்கிரஸ் அரசால் சீதைக்கு கோவில் கட்டப்பட உள்ளது.
4. இலங்கை இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர் - கோத்தபய ராஜபக்சே அதிர்ச்சி தகவல்
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
5. சொந்த வார்டில் அதிக வாக்கு வாங்க முடியாதவர் செல்வாக்கு பற்றி பேசுவது பெரிய நகைச்சுவை; மு.க.ஸ்டாலின்
சொந்த வார்டில் அதிக வாக்கு வாங்க முடியாத முதல் அமைச்சர், செல்வாக்கு பற்றி பேசுவது பெரிய நகைச்சுவை என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை