உலக செய்திகள்

இங்கிலாந்திற்கு ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவர் எழுதிய ‘காதல் கடிதம்’ + "||" + EU official’s ‘love letter’ to UK over Brexit

இங்கிலாந்திற்கு ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவர் எழுதிய ‘காதல் கடிதம்’

இங்கிலாந்திற்கு ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவர் எழுதிய ‘காதல் கடிதம்’
பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவர் இங்கிலாந்திற்கு ‘காதல் கடிதம்’ ஒன்றை எழுதியுள்ளார்.
பிரசல்ஸ்,

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்தை வெளியேற்றுவதற்காக, போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தின் துணைத் தலைவர் ஃப்ரான்ஸ் டிமெர்மான்ஸ் இங்கிலாந்து அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

“இங்கிலாந்துக்கு எனது காதல் கடிதம்: குடும்ப உறவுகளை ஒருபோதும் துண்டிக்க முடியாது” என்ற தலைப்பில் அந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;-

“இங்கிலாந்தை நான் மிகவும் விரும்புகிறேன். அது உங்களுக்கும் நன்றாக தெரியும். ஒரு பழைய காதலன் போல, உங்கள் பலம் மற்றும் பலவீனம் எல்லாவற்றையும் நான் அறிவேன்.

நீங்கள் இப்போது விலகிச் செல்ல முடிவு செய்திருக்கிறீர்கள். அது மிகவும் வேதனையளிப்பதாக இருந்தாலும், அந்த முடிவை நான் மதிக்கிறேன்.

நாங்கள் எங்கும் விலகிச் செல்லவில்லை. திரும்பி வருவதாக இருந்தால் நீங்கள் எப்போதும் வரவேற்கப்படுவீர்கள்” என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களால் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல், 100 ஆண்டுகள் ஆன நிலையில் அடக்கம்
இங்கிலாந்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல், 100 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அடக்கம் செய்யப்பட்டது.
2. இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் நபர் பலி
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் நபர் பலியாகியுள்ளார்.
3. இங்கிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான ஆக்கி போட்டியில், இந்திய பெண்கள் அணி வெற்றிபெற்றது.
4. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் இலக்கு
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி நிதான ஆட்டம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தென்ஆப்பிரிக்க அணி நிதானமாக விளையாடி வருகிறது.