மாநில செய்திகள்

சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்கியது வரவேற்கத்தக்கது - விஜயகாந்த் + "||" + Execution of the guilty is welcome in minor girl's murder case - Vijayakanth

சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்கியது வரவேற்கத்தக்கது - விஜயகாந்த்

சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்கியது வரவேற்கத்தக்கது - விஜயகாந்த்
கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியது வரவேற்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,

கோவை மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சந்தோஷ்குமார் (வயது 34) என்பவருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;-

“சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சந்தோஷ்குமார் என்பவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்த தீர்ப்பை வழங்கிய போக்சோ நீதிமன்றத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையில் ஒரு நல்ல தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு தேமுதிக சார்பில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. “குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவியாக அமையும்” - நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்கு மோடி வரவேற்பு
கொரோனா வைரசால் பாதித்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளை பிரதமர் மோடி வரவேற்றார். இது குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவியாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.
2. தேசிய அளவிலான விருதுகள் பெற விளையாட்டு வீரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய அளவிலான விருதுகள் பெற விளையாட்டு வீரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு.
3. அரசியல் ‘பஞ்ச்’ வசனத்துக்கு வரவேற்பு!
பிரபல கதாநாயகர்கள் தங்கள் படங்களில், அரசியல் ‘பஞ்ச்’ பேசி வருகிறார்கள்.
4. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிட திறப்பு விழா: கரூர் வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தை திறக்க கரூருக்கு இன்று வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5. வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதா: காவிரி டெல்டா விவசாயிகள் வரவேற்பு
தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்துள்ள வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதாவுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.