தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் அசம்பாவிதம் இல்லை: வெள்ளிக்கிழமை தொழுகை அமைதியாக முடிந்தது + "||" + In Uttar Pradesh there is no ambiguity: Friday prayers ended peacefully

உத்தரபிரதேசத்தில் அசம்பாவிதம் இல்லை: வெள்ளிக்கிழமை தொழுகை அமைதியாக முடிந்தது

உத்தரபிரதேசத்தில் அசம்பாவிதம் இல்லை: வெள்ளிக்கிழமை தொழுகை அமைதியாக முடிந்தது
உத்தரபிரதேசத்தில் நேற்று அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. அங்கு வெள்ளிக்கிழமை தொழுகை அமைதியாக நடந்து முடிந்தது.
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் 19 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) முஸ்லிம்களின் தொழுகையையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதற்றமான இடங்களில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


கண்காணிப்பு பணியில் ஆளில்லா விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன. வதந்திகள் பரப்புவதை தடுக்கும் விதத்தில் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மாநிலத்தில் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல், தொழுகை அமைதியாக நடந்து முடிந்தது.

இதை போலீஸ் டி.ஜி.பி. ஓ.பி.சிங், லக்னோவில் நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசத்தில் ஒரே ஆண்டில் 9,261 கால்நடைகள் சாவு
உத்தரபிரதேசத்தில் ஒரே ஆண்டில் 9,261 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
2. உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் உள்ளதா? - இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம்
உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் உள்ளதா என்பது குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
3. உத்தரபிரதேசத்தில் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு: வெட்டி எடுக்க இ-டெண்டர் மூலம் ஏலம்
3 ஆயிரம் டன் தங்கம் எடுக்கக்கூடிய தங்க சுரங்கம் உத்தரபிரதேச மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெட்டி எடுப்பதற்காக இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது.
4. அதிக மதிப்பெண் கிடைக்க விடைத்தாளில் ரூ.100 இணையுங்கள் மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் அறிவுரை
உங்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்க விடைத்தாளில் ரூ.100 இணைத்து விடுங்கள் என மாணவர்களிடையே பேசிய பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார்.
5. சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்கள், எப்படி உயிருடன் இருக்க முடியும்? -யோகி ஆதித்யநாத்
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது சாக வேண்டும் என வருபவர்கள் எப்படி உயிர்வாழ்வார்கள் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.