தேசிய செய்திகள்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,160 டன் வெங்காயம் இந்தியா வந்தடைந்தது: விலை மேலும் குறைய வாய்ப்பு + "||" + India has imported 1,160 tonnes of onions imported from abroad: Price is likely to drop further

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,160 டன் வெங்காயம் இந்தியா வந்தடைந்தது: விலை மேலும் குறைய வாய்ப்பு

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,160 டன் வெங்காயம் இந்தியா வந்தடைந்தது: விலை மேலும் குறைய வாய்ப்பு
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,160 டன் வெங்காயம் இந்தியா வந்தடைந்தது. இதனால் வெங்காயம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
புதுடெல்லி,

விளைச்சல் பாதிப்பு காரணமாக, வெங்காயம் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. கிலோ ரூ.200 வரை சென்றது. வெங்காயம் வரத்து அதிகரித்ததால், அதன் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

இருப்பினும், அருணாசலபிரதேச தலைநகர் இடாநகரில் இன்னும் ரூ.150 வரை வெங்காயம் விற்கப்பட்டு வருகிறது. கொல்கத்தாவில் ரூ.120 ஆகவும், டெல்லியில் ரூ.102 ஆகவும், சென்னையில் ரூ.80 ஆகவும் விலை நிலவரம் உள்ளது.


வெங்காயம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்காக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொறுப்பை எம்.எம்.டி.சி. என்ற தனது நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்துள்ளது. அந்த நிறுவனம், துருக்கி, எகிப்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 1,160 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது.

அந்த வெங்காயம் தற்போது மும்பை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் வெங்காயம் உள்ளது.

மேலும், 10 ஆயிரத்து 560 டன் வெங்காயம் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் இந்தியா வந்தடையும் என்றும் அதிகாரி கூறினார். இதுவரை மொத்தம் 49 ஆயிரத்து 500 டன் வெங்காய இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்த மாதமும் கப்பலில் வெங்காயம் வந்து சேரும் என்று அதிகாரி கூறினார்.

வெங்காயம் வரத்து அதிகரிப்பால், அதன் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 1,000 ஆங்கில பள்ளிகளை திறக்க முடிவு - மந்திரி சுரேஷ்குமார் அறிவிப்பு
கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 1,000 ஆங்கில பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மந்திரி சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.
2. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,45,380 ஆக உயர்வு: பலி எண்ணிக்கை 4,167 ஆனது
இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆகவும், பலி எண்ணிக்கை 4,167 ஆகவும் உயர்ந்துள்ளது.
3. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 3 பேரூராட்சி, 1,153 சிறிய கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம்
தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 3 பேரூராட்சி, 1,153 சிறிய கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
4. வங்காளதேசத்தில் ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
5. கோவில்பட்டியில் 1,200 பேருக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
கோவில்பட்டியில் 1,200 பேருக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.