தேசிய செய்திகள்

இளைஞர்கள் துணிச்சலாக கேள்வி கேட்பது மிகவும் சிறப்பானது - பிரதமர் மோடி + "||" + It is very good for young people to question bravely - PM Modi

இளைஞர்கள் துணிச்சலாக கேள்வி கேட்பது மிகவும் சிறப்பானது - பிரதமர் மோடி

இளைஞர்கள் துணிச்சலாக கேள்வி கேட்பது மிகவும் சிறப்பானது - பிரதமர் மோடி
இளைஞர்கள் துணிச்சலாக கேள்வி கேட்பது மிகவும் சிறப்பானது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் அகில இந்திய வானொலி வழியே “மன் கி பாத்”(மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பேசி வருகிறார்.

அதன்படி இன்று அவர் பேசிய 60 வது உரை இந்த ஆண்டின் கடைசி உரையாகும். இன்றையை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது;-

“அடுத்த பத்து ஆண்டுகளில் நவீன இந்தியாவை கட்டமைப்பதில் இளைய தலைமுறையினர் முக்கிய பங்கு வகிப்பார்கள். 

நமது இளைஞர்கள் அராஜகம், நிலையற்ற தன்மை மற்றும் குழப்பம் ஆகியவற்றை வெறுக்கிறார்கள். மேலும் சாதி, அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறை ஆகியவற்றை அவர்கள் விரும்புவதில்லை.

அரசியலமைப்பு மீது இந்திய இளைஞர்களின் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அமைப்பு முறை சரியில்லை என்றால் இளைஞர்கள் துணிச்சலாக கேள்வி கேட்கிறார்கள். இதை நான் மிகவும் சிறப்பானதாக பார்க்கிறேன்.

இந்தியாவின் இளைய தலைமுறையினர் ஒரு புதிய செயல் திட்டம் மற்றும் ஒழுங்கின் உருவகமாக இருந்து, நமது நாட்டை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வார்கள். ஒரு புதிய இந்தியாவை இளைஞர்கள் உருவாக்கி வருகின்றனர்.

2020ம் ஆண்டில் நாம் மீண்டும் சந்திபோம். புத்தாண்டு, புதிய சகாப்தம், புதிய சக்தி, புத்துணர்ச்சி ஆகியவற்றைக் கொண்டு நம்முடைய தீர்மானங்களை நிறைவேற்றுவோம்” என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புரோ லீக் ஆக்கி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்
சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் புரோ லீக் ஆக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள முன்னணி 9 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.
2. கா‌‌ஷ்மீர் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் - ஐ.நா. சபை அறிவிப்பு
கா‌‌ஷ்மீர் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என்று ஐ.நா. சபை அறிவித்துள்ளது.
3. "பசுமை பொருளாதாரத்தை" மேம்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் -பிரதமர் மோடி
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கிய பங்கை ஆற்றும் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
4. டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் அடிமை மன நிலையை காட்டுகிறது ; சிவசேனா பாய்ச்சல்
டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் இந்தியர்களின் அடிமை மன நிலையை காட்டுவதாக சிவசேனா விமர்சித்துள்ளது.
5. பிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம் ; 30 -க்கும் மேற்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
பிரதமர் மோடி, தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு நாளை செல்கிறார்.