தேசிய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீது ஐதராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் + "||" + RSS chief says '130 cr Indians are Hindus': Cong leader files police complaint in Hyd

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீது ஐதராபாத் போலீஸ் நிலையத்தில் புகார்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீது ஐதராபாத் போலீஸ் நிலையத்தில் புகார்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீது ஐதராபாத் போலீஸ் நிலையத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹனுமந்த ராவ் புகார் அளித்துள்ளார்.
ஐதராபாத்

ஐதராபாத்தில் கடந்த 25 ந்தேதி  ஒரு நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல், தேசியவாத உணர்வும், பாரதத்தின் கலாச்சாரத்தையும் அதன் பாரம்பரியத்தையும் மதிக்கும் மக்கள் இந்துக்கள் என்றும், ஆர்.எஸ்.எஸ் நாட்டின் 130 கோடி மக்களை இந்துக்களாக கருதுகிறது என்றும் பேசினார். 

இதற்கு கண்டனம் தெரிவித்து ஐதராபாத்  எல்.பி.நகர் போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹனுமந்த ராவ் புகார் அளித்துள்ளார்.

அதில் பகவத்தின் பேச்சு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் போன்றவர்களின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் புண்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அரசியல் சாசனத்துக்கு எதிராகவும் அமைந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் வகுப்புவாத பதட்டத்திற்கும் வழிவகுக்கும், மேலும் இது ஐதராபாத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகவும் மாறக்கூடும் என கூறி உள்ளார்.

இதுகுறித்து எல்.பி. நகர் போலீஸ் ஆய்வாளர் அசோக் ரெட்டி காங்கிரஸ் தலைவரிடமிருந்து புகார்  வந்துள்ளதாகவும் , வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டுமானால் சட்டப்பூர்வமான ஆதாரத்தை தேடி வருவதாகவும்  கூறி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ”தேசியவாதம்” என்ற சொல்லை தவிர்க்கவும் ; ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
இந்தியக் கலாச்சாரம் என்பது, இந்து கலாச்சாரம் என்று அறியப்படுகிறது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.
2. ‘ஒருங்கிணைந்த கல்வியே இன்றைய தேவை’ ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு
ஒருங்கிணைந்த கல்வியே இன்றைய தேவை என்று சென்னையில் நடந்த விழா ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசினார்.