தேசிய செய்திகள்

சென்னை உள்பட 4 மெட்ரோ நகரங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு + "||" + Non-Subsidised LPG Becomes More Expensive From Today; Price Up Rs 140/Cylinder Since August

சென்னை உள்பட 4 மெட்ரோ நகரங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

சென்னை உள்பட 4 மெட்ரோ நகரங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
சென்னை உள்பட 4 மெட்ரோ நகரங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது.
புதுடெல்லி,

மானியமற்ற எல்பிஜி  சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை ஜனவரி 1, 2020 முதல் அதிகரித்து உள்ளது. டெல்லி மற்றும் மும்பையில், இந்த உயர்வு முறையே சிலிண்டருக்கு ரூ.19 மற்றும் ரூ .19.5 ஆக உயர்ந்துள்ளது. ஜனவரி 1 முதல், மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்  டெல்லியில் சிலிண்டருக்கு ரூ.714 ஆகவும், மும்பையில் சிலிண்டருக்கு ரூ .684.50 ஆகவும் உள்ளது.

டிசம்பரில், சிலிண்டருக்கு டெல்லியில் ரூ.695 ஆகவும்,  மும்பையில் ரூ .665 ஆகவும் விலை இருந்தது என்று இந்தியன் ஆயில் நிறுவன  வலைத்தளம் iocl.com தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவில்  மானியமில்லாத  சிலிண்டருக்கு ரூ. 21.5 உயர்ந்து ரூ.747 ஆகவும்,  சென்னையில் ரூ.20 உயர்ந்து  ரூ .734 ஆகவும் உள்ளது.

கடந்த ஆகஸ்ட் முதல்  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.140 வரை அதிகரித்து உள்ளது.

மெட்ரோ நகரங்களில் சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை  கீழ்கண்டவாறு ஜனவரி 1, 2020 முதல் அமலுக்கு வருகிறது.

மெட்ரோ
நகரங்கள்

மானியமில்லாத 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் (ரூபாயில்)

ஜனவரி

டிசம்பர்

டெல்லி

714

695

கொல்கத்தா

747

725.5

மும்பை

684.50

665

சென்னை

734

714

(ஆதாரம்: iocl.com)


தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் ‘கிடுகிடு’ விலை உயர்வு: ஒரு கிலோ மல்லிகை, பிச்சிப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை
நெல்லையில் பொங்கல் பண்டிகையையொட்டி கிடுகிடுவென விலை உயர்த்தப்பட்டு, ஒரு கிலோ மல்லிகை, பிச்சிப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.
2. வெங்காயம், முருங்கைக்காயை தொடர்ந்து உருளைக்கிழங்கு விலை ‘திடீர்’ உயர்வு - காய்கறி விலைகள் சற்று குறைவு
வெங்காயம், முருங்கைக்காயை தொடர்ந்து வரத்து குறைவால் உருளைக்கிழங்கு விலை உயர்ந்து வருகிறது. அதேசமயம் விற்பனை மந்தத்தால் காய்கறி விலை சற்று குறைந்துள்ளது.
3. உப்புக்கோட்டை பகுதியில், சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு
உப்புக்கோட்டை பகுதியில் சின்ன வெங்காயம் வரத்து குறைந்ததால், விலை கிடுகிடுவென உயர்ந்தது.
4. வரத்து குறைவு எதிரொலி: பெரிய வெங்காயம் விலை ‘கிடுகிடு’ உயர்வு - கோவையில் கிலோ ரூ.75-க்கு விற்பனை
வரத்து குறைவு எதிரொலியாக கோவையில் பெரிய வெங்காயத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து ஒரு கிலோ ரூ.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. மானியமில்லா சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.76 உயர்ந்தது
சென்னையில் மானியமில்லா சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.76 உயர்ந்தது. புதிய விலை ரூ.696 ஆகும்.